இதை மட்டும் தினமும் செய்தால் போதும்.. உங்களுக்கு பக்கவாதமே வராது!!
தற்போது உள்ள பல இளைஞர்களின் கவலை தொப்பையை குறைப்பது. சாப்பாடு அளவு என்னதான் கட்டுக்குள் இருந்தாலும் தொப்பை குறைக்க முடியாமல் திணறுகின்றனர். தொப்பை உடலில் தேவையற்ற கொழுப்புக்களின் படிமங்களால் உருவாகிறது. இதனால் இந்த தேவையற்ற கொழுப்பை கரைக்க சில உணவுகளை சேர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அதில் ஒன்று தான் கருவேப்பிலை.
உணவில் சிறிதளவில் சுவைக்காக சேர்க்கப்படும் இந்த கருவேப்பிலை பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. இதில் விட்டமின் எ,பி,சி, ஈ உள்ளது. மேலும் கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. செரிமான சக்தியை அதிகரிப்பதுடன் உணவை திறம்பட உடைக்கவும், செரிமான நொதிகளை தூண்டவும் உதவுகிறது. அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பொதுவான செரிமான பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
தினமும் உணவில் கருவேப்பிலை சேர்ந்துக் கொள்வதால் உடலில் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் எழும்புகளை வலுப்படுத்துகிறது. அதிகமான கொழுப்பு தனிமங்கள் படிவதால் உண்டாகும் இதய நோயையும் இரத்த ஓட்ட அமைப்பையும் சரி செய்கிறது. இதனால் அபாயகரமான நோய்களான இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைகிறது. கருவேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால் உடல் கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும். தேவையற்ற கொழுப்புகளால் உண்டாகும் தொப்பை குறையும்.
Read more: மூல நோயை அடியோடு விரட்ட வேண்டுமா? அப்போ இதை விட சிறந்த மருந்து இருக்கவே முடியாது..