சர்க்கரை நோயாளிகளே, ரொம்ப நாளா உங்க காலில் புண் இருக்கா? அப்போ இதை மட்டும் பண்ணுங்க, எந்த ஆப்ரேஷனும் தேவை இல்லை..
சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. சின்ன குழந்தை முதல் வயதானவர்கள் வரை சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். அந்த வகையில், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதனால் பல சமயங்களில் புண் ஏற்பட்ட விரலையே எடுக்க நேரிடும். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்பட்ட புண்ணை விரைவில் குணமாக்க நாட்டு மருத்துவத்தில் அற்புதமான மருந்து ஒன்று உள்ளது. அந்த மருந்தை நீங்கள் பயன்படுத்தும் போது, உங்கள் விரல்களை அகற்ற வேண்டிய அவசியம், இருக்கவே இருக்காது.
இதனால், நீங்கள் தேவை இல்லாத செலவு செய்து உங்கள் விரல்களை தியாகம் செய்வதற்கு பதில், இந்த அற்புதமான மருந்தை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். சா்க்கரை நோயாளிகள் பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது அவர்களின் காலில் ஏற்படும் குழிப்புண்கள் தான். மருத்துவம் செய்தும் அந்த புண்கள் ஆறவில்லை என்றால், உடனே விரலை துண்டித்து விடுவதும், ஒருவேளை காலில் இருந்தால், காலை துண்டித்து விடுவதும் சர்வ சாதாரணமாக மாறி விட்டது. காலையும், விரலையும் மட்டும் இல்லாமல் பல ஆயிரங்கள் மற்றும் லட்சங்களை இழக்க நேரிடும்.
அதனால் இந்தப் பிரச்சனைக்கு கண்ட மருந்துகளை பயன்படுத்தாமல் முடிந்த வரை நாட்டு மருந்துகளை பயன்படுத்துவது நல்லது. இதனால், உங்களின் பணம் மட்டும் இல்லாமல், உங்களின் விரல் மற்றும் கால்களும் பாதுகாக்கப்படும். அந்த அற்புத மருந்து, ஆவாரம் இலை தான். இந்த இலையை மிக்ஸியில் அரைத்து, அதன் விழுதை ஒரு கரண்டியில் எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது அதனுடன் சிறிது நல்லெண்ணை சேர்த்து, ஒரு கடாயில் ஆவாரம் விழுதை வதக்க வேண்டும். பின்பு அதை சுத்தமான காட்டனில் வைத்து புண் இருக்கும் இடத்தில் கட்டிவிட வேண்டும்.
இது போல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டி வந்தால், குழிப்புண்கள் இருந்த இடமே தெரியாமல் மாயமாக மறைந்துவிடும்.
Read more: 10 வயசு கம்மியா தெரியனுமா? அப்போ இனி கெமிக்கல் இல்லாத இந்த ஹேர் டை பயன்படுத்துங்க..