வீசிங் பிரச்சனையால் அவதிப்படுறீங்களா?? இனி கவலையே வேண்டாம்.. இதை மட்டும் செய்தால் போதும்..
குளிர் காலம் என்றாலே, வீசிங் பிரச்சனை உள்ளவர்களுக்கு பெரும் பாடு தான். ஆம், மூச்சுத் திணறல் என்று சொல்லப்படும் இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு மூச்சுக்குழாயில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, அவர்களால் மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். ஒவ்வாமை இருப்பவர்களுக்கு தான் அடிக்கடி வீசிங் பிரச்சனை ஏற்படும். இதற்காக மருத்துவமனைக்கு அடிக்கடி செல்ல நேரிடும். ஆனால் நீங்கள் இனி இப்படி அவதிப்பட தேவையில்லை. இந்த மூச்சுத்திணறலை சரி செய்யும் வீட்டு வைத்தியம் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்..
வெதுவெதுப்பான ஈரப்பதம் நிறைந்த காற்றை உள்ளிழுப்பது சைனஸ்களை அழித்து, காற்றுப்பாதைகளை திறக்க உதவும். இதனால் நீங்கள் மூச்சு விட சிரமப்படும் போது, நீராவி பிடியுங்கள். அப்போது சில துளிகள் புதினா எண்ணெய் அல்லது யூகலிபடஸ் எண்ணெயை தண்ணீரில் சேர்த்துக்கொள்ளுங்கள். 2013 ஆம ஆண்டு ஆராய்ச்சியின்படி, நீராவி பிடிப்பது சுவாச மண்டலத்தின் தசைகளை தளர்த்தி, சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.
இதற்க்கு பதில், கால் தேக்கரண்டி கரு மிளகை உரலில் போட்டு உடைத்து, அதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள். பிறகு, ஒரு திப்பிலியை பொடியாக்கி அதையும் அந்த தண்ணீரில் சேருங்கள். பின்னர், காம்பு நீக்கிய ஒரு வெற்றிலையை அந்த தண்ணீரில் போட்டு, நன்கு கொதித்த பிறகு வடிகட்டி குடித்தால் வீசிங் பிரச்சனை குணமாகும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் இரண்டிலும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளது. இது ஒவ்வாமையைக் குறைக்க உதவுகிறது. இதனால் 20 மில்லி தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி, பிறகு ஒரு சூடத்தை பொடியாக்கி அதை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சிக் கொள்ளுங்கள். லேசாக ஆறின பிறகு, அந்த எண்ணெயை மார்பு பகுதியில் தடவினால் வீசிங் பாதிப்பு குணமாகும்.