அடிக்கடி நரம்பு சுண்டி இழுக்குதா? இனி கவலையே வேண்டாம்.. அடிக்கடி இந்த பானத்தை குடிச்சா போதும்..
தற்போது உள்ள காலகட்டத்தில், கண்டதை சாப்பிடும் பழக்கம் வந்துவிட்டது. ஆனால், அந்த நாவு ஆரோக்கியமானதா இல்லையா என்று யோசிப்பதே இல்லை. அதே சமயம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதையும் நாம் யோசிப்பது இல்லை. செல்போன் அல்லது டிவியை பார்த்துக்கொண்டு கண்ட உணவுகளை, கண்ட நேரத்தில், அதிக அளவு சாப்பிட்டு விடுகிறோம். மனிதனுக்கு ஏற்படும் வியாதிகள் பலவற்றுக்கு முக்கிய காரணம் இது தான். ஆம், உட்டச்சத்து இல்லாத உணவுகளை அடிக்கடி சாப்பிடும் போது, அது நமது உடலில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, நரம்பு சம்மந்தபட்ட பாதிப்புகள் இளம் வயதிலேயே ஏற்பட ஊட்டச்சத்து இல்லாத உணவுகள் தான் முக்கிய காரணம். நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், நாளடைவில் மாரடைப்பிற்கு வழிவகுக்கும்.
நரம்பில் ஏற்படும் பாதிப்புகள், இரத்த ஓட்டத்தை பாதிக்கும். இந்த சூழல் தொடர்ந்து இருந்தால், அது நுரையீரல், இதயம் உள்ளிட்ட உறுப்புகளை கடுமையான பாதித்து விடும். இதனால், இது போன்ற பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரி செய்து விட வேண்டும். இது போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு, இஞ்சி மற்றும் எலுமிச்சம் பானம் தான். இதற்கு முதலில், ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி, சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர், அதை சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸில் அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை, விதைகளை நீக்கிவிட்டு எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது ஒரு கிளாஸ் தண்ணீரை சூடுபடுத்துங்கள்.
பின்னர் அதில், இஞ்சி சாறை ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க வையுங்கள். இப்போது பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறையும் அதில் கலந்து குடித்து வந்தால் நரம்பு அடைப்பு பிரச்சனைகள் கட்டாயம் குணமாகும். நீங்கள் தினமும் இந்த பானத்தை குடித்து வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டும் இல்லாமல், இரத்த குழாயில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து விடும். மேலும், செரிமான பிரச்சனை, வாயுத் தொல்லை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், வயிறு வலி போன்ற பாதிப்புகளுக்கும் இது நிரந்தர தீர்வு அளிக்கும்.
Read more: இரவில் இந்த உணவுகளை தவிர்த்தால் உடல் எடை குறைவது எளிது..!