மூட்டு வலி, முழங்கால் வலிக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ தொப்புளில் இந்த எண்ணெய் வையுங்க..
பொதுவாக தொப்புளில் ஏதாவது ஒரு எண்ணெய் வைப்பது நம்மில் பலருக்கு தெரியும். குறிப்பாக தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வைத்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில், தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உடலில் உள்ள பாதி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடும்.
தற்போது உள்ள காலகட்டத்தில், பெரும்பாலான வேலைகள் லேப்டாபில் இருப்பதால் கண்கள் வறட்சியடைகிறது. இவர்கள் இரவில் தொப்புளை சுற்றி எண்ணெய் வைத்தல் கண் வறட்சி நீங்கி விடும். அந்த வகையில், கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சனைகள் உள்ளவர்கள், 3 சொட்டு நெய் அல்லது தேங்காய் எண்ணெயை இரவு தூங்குவதற்கு முன், தொப்புளை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.
ஒரு வேலை உங்களுக்கு சரும பிரச்சனை, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் இருந்தால், 3 சொட்டு ஆமணக்கு எண்ணெயை தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால் உங்களுக்கு சரும பிரச்சனை, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் இருக்காது. இதற்காக நீங்கள் கண்ட கிரீம் மற்றும் எண்ணெய் வாங்கி பூச வேண்டிய அவசியம் இல்லை.
உங்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி, சோம்பல், போன்ற பிரச்சனைகள் இருந்தால் 3 சொட்டு கடுகு எண்ணெயை தொப்புளில் விட்டு மசாஜ் செய்யுங்கள். இதனால் உங்களை பாடாய் படுத்தும் மூட்டு வலி, முழங்கால் வலிக்கு தீர்வு கிடைப்பது மட்டும் இல்லாமல், உங்களுக்கு பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் போன்ற நன்மைகளும் கிடைக்கும்.