இளம் வயதிலேயே வெள்ளை முடி, வயதான தோற்றம் இருக்கா? கவலையே வேண்டாம்.. இதை மட்டும் செய்யுங்க..
இன்றைய உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவற்றால் இளம் வயதினருக்கு கூட விரைவில் நரைமுடி வந்துவிடுகிறது. இதனால் உடல் தோற்றம் மாறுவதுடன் தன்னம்பிக்கையும் குறைகிறது. இதனை தடுக்க சில எளிய குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
முடி உதிர்தல், வெள்ளை முடி போன்ற பிரச்சனைகளுக்கு வீட்டில் இருக்கும் சில பொருட்கள் மூலம் தீர்வு காணலாம். பச்சை நெல்லிக்காய், கருஞ்சீரகம், மருதாணி, செம்பருத்தி பூ போன்றவை உபயோகித்து எண்ணெய் தயாரித்து பயன்படுத்துங்கள். இதனால் சந்தையில் கிடைக்கும் தரமற்ற சாம்ப்பூ, கண்டிஷ்னருக்கு ஒரு சவாலாக அமையும். இதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் பச்சை நெல்லிக்காய், கருஞ்சீரகம், மருதாணி, செம்பருத்தி பூ ஆகியவற்றை போட்டு நன்கு சூடாக்கி ஆறவிட்டு பின் ஒரு பாட்டிலில் எடுத்துக்கொள்ளாம். இதனை தலையில் தேய்த்து ஊறவிட்டு கழுவி வர வெள்ளை முடி பிரச்சனை சரியாகும்.
முடி உதிர்தல், விரைவில் வெள்ளை முடி வருவதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம். இது பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்துள்ளது. இதனால் கடினமான நேரங்கில் முடிந்த அளவிற்கு கூலாக வேலை செய்வது, மன சோர்வு தரும் விசயங்கலில் இருந்து விலகி இருப்பது இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையும். நொறுக்கு தீனிசாப்பிடுவது, பாஸ்ட் புட் போன்றவை உடலுக்கு கேடு விளைவிக்கும். இதனால் புரோட்டின், புரதம், இரும்பு, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கை உணவில் அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டும். தூக்கமின்மையும் உடலுக்கு நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று தான் இந்த வெள்ளைமுடி.
சராசரியாக ஒரு நபர் 7-8 மணி நேரம் தூங்குவது நல்லது. அதேபோல் புகைப்பிடிப்பதை கைவிடுதல் வேண்டும். உடற்பயிற்சிகள் செய்வது, யோகாசனம் செய்வது போன்றவை நம் வாழ்வியல் முறையை கடைபிடிப்பதன் மூலமும் உடலில் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.