For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பல நாளா சரியா மலம் கழிக்க முடியாம அவதிப்படுறீங்களா? இதை மட்டும் செய்யுங்க.. கொஞ்ச நேரத்துல உங்க மொத்த வயிறும் சுத்தமாகும்..

best home remedy for constipation
05:22 AM Jan 18, 2025 IST | Saranya
பல நாளா சரியா மலம் கழிக்க முடியாம அவதிப்படுறீங்களா  இதை மட்டும் செய்யுங்க   கொஞ்ச நேரத்துல உங்க மொத்த வயிறும் சுத்தமாகும்
Advertisement

உடலில் முழுமையாக மலம் வெளியாறாமல் இருந்தால் உடல் நலக்குறைவு, மன அழுத்தம், சோர்வு அனைத்தும் உண்டாகும். முகமும் பொலிவிழந்து காணப்படும். இதனால் உடலில் தேங்கியுள்ள மலத்தை வீட்டு மருத்துவம் மூலம் வெளியேற்றி உடல்நலனை பாதுகாக்கலாம். இதற்கு சில சிறந்த வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

பனங்கிழங்கு: பனங்கிக்கிழங்கு அதிக நார்சத்து உடையது. இதனால் மலச்சிக்கல் முற்றிலும் குணமாகும். 4-5 பனங்கிழங்குகளை வெயிலில் காயவைத்து பவுடர் போல் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த பவுடரை தினம் ஒரு ஸ்பூன் வீதம் காலை எழுந்ததும் சூடு தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் விரைவில் குணமாகும்.

ஆளிவிதை: ஆளிவிதையும் மலச்சிக்கலை குணமாக்கும் தன்மை கொண்டது. சிறிதளவு ஆளிவிதைகளை வறுத்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு கப் கெட்டி தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கி இருக்கும் மலம் விரைவில் வெளியேறும். அதே போல் ஒரு கப் தயிரில் ஓட்ஸ் கலந்து சாப்பிட்டு வந்தாலும் மலச்சிக்கல் குணமாகும்.

நெல்லிச்சாறு: நெல்லிச்சாறுக்கு அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. அதில் முக்கியமானது மலச்சிக்கலை சரி செய்வது. நெல்லிக்கனியை வாங்கி நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்து ஜூஸாக குடித்து வரலாம். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதும் உடலில் மலம் தேங்காமல் தடுக்க உதவும்.

Read more: காபி குடிப்பதால் இறப்பு ஆபத்து குறையும்… ஆனா இந்த நேரத்தில் தான் குடிக்கணும்.. புதிய ஆய்வில் தகவல்…

Tags :
Advertisement