குதிகால் வலி பாடாய் படுத்துகிறதா.? நொடியில் நிவாரணம் தரும் 3 அதிசய பொருட்கள்.!
நமது குதிகால் எலும்பிலிருந்து கால் கட்டைவிரல் வரை செல்லக்கூடிய திசுவில் அழற்சி காரணமாக வீக்கம் ஏற்பட்டு குதிகால் வலி ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் தினமும் நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கு இந்த வலி ஏற்படும். வீட்டில் பணி செய்யும் பெண்கள் காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு குதிகால் வலி அடிக்கடி ஏற்படும்.
இந்தக் குதிகால் வலியை எளிமையான கை வைத்தியம் மூலமே குணப்படுத்தி விட முடியும். குதிகால் வலியால் அவதிப்படுபவர்கள் செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் வலி விரைவில் குணமடையும். மேலும் செங்கலை சூடாக்கி அதன் மீது எருக்கஞ்செடியின் இலையை வைத்து அதில் நமது குதிகாலை வைத்து எடுத்தால் இந்த வலியிலிருந்து எளிதில் நிவாரணம் கிடைக்கும். மேலும் ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் மயன என்ற தைலத்தையும் பயன்படுத்தலாம்.
இந்த தைலம் மெழுகிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த தைலத்தை குதிகாலில் தடவி வருவதன் மூலம் இந்தப் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு காணலாம். பொதுவாக குறைந்த எடையுள்ள காலணிகளை பயன்படுத்துவதன் மூலம் குதிகால் வலியை பெரும்பாலும் தவிர்க்க முடியும். ஹை ஹீல்ஸ் போன்ற காலணிகள் அணிவதையும் தவிர்க்கலாம். சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதன் மூலமும் குதிகால் வலி ஏற்படலாம். அவர்கள் யூரிக் அமிலத்தை குறைக்க மருந்து சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.