முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்திய சினிமாவுக்கு மிகச்சிறந்த பங்களிப்பு..!! நடிகை சமந்தாவுக்கு சிறந்த பெண்மணி விருது அறிவிப்பு..!!

Samantha is to be conferred with Indian Cinema's prestigious 'Female of the Year' award.
03:18 PM Sep 14, 2024 IST | Chella
Advertisement

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி சார்பில் அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் செப்.27ஆம் தேதி விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இந்திய சினிமாவின் மதிப்புமிக்க 'ஆண்டிற்கான சிறந்த பெண்' என்ற விருது சமந்தாவுக்கு வழங்கப்பட இருக்கிறது.

Advertisement

நடிகை சமந்தா "ஏ மாய சேசவே", "ஈகா", "நீதானே என் பொன்வசந்தம்", "மகாநதி" மற்றும் "சூப்பர் டீலக்ஸ்" உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக புகழ் பெற்றவர். இந்திய திரைத்துறைக்கு பல ஆண்டுகளாக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

மேலும், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம் சரண் மற்றும் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த விருதுக்கு நடிகை சமந்தா நன்றி தெரிவித்துள்ளார். ஒரு கலைஞராகவும், ஒரு பெண்ணாகவும் இந்த விருதை பெறுவது பெருமையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Read More : ’உங்களை அனுமதித்தால் என் வேலை போயிடும்மா’..!! தேர்வெழுத தாமதமாக வந்த மாணவியிடம் கெஞ்சிய போலீஸ்..!!

Tags :
அபுதாபிஇந்திய சினிமாசர்வதேச இந்திய திரைப்பட அகாடமிசிறந்த பெண்மணிநடிகை சமந்தா
Advertisement
Next Article