முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரபல டைட்டானிக் பட நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்...!

06:00 AM May 06, 2024 IST | Vignesh
Advertisement

ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் உருவான டைட்டானிக் மற்றும் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான பிரிட்டிஷ் நடிகர் பெர்னார்ட் ஹில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

Advertisement

நடிகரும் பாடகியுமான பார்பரா டிக்சன் இந்த செய்தியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தினார். “பெர்னார்ட் ஹில்லின் மரணத்தை நான் மிகவும் வருத்தத்துடன் குறிப்பிடுகிறேன். ஜான் பால் ஜார்ஜ் ரிங்கோ மற்றும் பெர்ட், வில்லி ரசல் அற்புதமான நிகழ்ச்சி 1974-1975 இல் நாங்கள் ஒன்றாக வேலை செய்தோம். உண்மையிலேயே பெர்னார்ட் ஹில் அற்புதமான நடிகர். அவருடன் நடித்தது ஒரு பாக்கியம், ”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹில் டைட்டானிக்கில் கேப்டன் எட்வர்ட் ஸ்மித் மற்றும் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் முத்தொகுப்பில் கிங் தியோடனாக நடித்தார். மேலும் 1982-ல் வெளிவந்த காந்தி படத்தில் நடித்துள்ளார். அமெரிக்க நடிகை மரியானா அவரது மனைவி ஆவார். இவர்களுக்கு கேப்ரியல் எனும் மகன் உள்ளார். சுமார் 50 ஆண்டு காலம் நடிப்பு சார்ந்து இயங்கிய அனுபவம் கொண்டவர். அவரது மறைவு செய்தியை அறிந்து திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Next Article