பெர்முடா முக்கோணத்தில் மாயமான கப்பல்கள், விமானங்களுக்கு என்ன ஆனது? மர்மம் உடைத்த ஆஸ்திரேலிய விஞ்ஞானி..!!
இந்த பிரபஞ்சம் எண்ணற்ற ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது. ஒவ்வொன்றும் புரியாத புதிரானது. ஆனால் அத்தனை புதிர்களையும் கண்டுப்பிடித்திடவேண்டும் என்று விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள். ஆனாலும் சிலவற்றை கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகளே திணருகிறார்கள். அதில் ஒன்று தான் பெர்முடா முக்கோணம்.
கரீபியக் கடலில் அமைந்துள்ள தீவு கூட்டமான போர்ட்டோ ரிக்கா மற்றும் அமெரிக்காவை ஒட்டி அமைந்துள்ள ஃப்ளோரிடா, நீரிணை ஆகிய மூன்றையும் இணைக்கும் முக்கோண வடிவிலான கடல் பரப்பு 'பெர்முடா ட்ரையாங்கிள்' என்கிறார்கள். இதன் பரப்பளவு சுமார் 7,00,000 மைல்கள் என வரையறுக்கப்படுகிறது. இதை சாத்தானின் முக்கோணம் என்றும் அழைக்கிறார்கள். பெர்முடா முக்கோணத்தில் கிட்டத்தட்ட 75 விமானங்கள் மாயமாகிவிட்டன, மேலும் இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிபுணர்கள் தொடர்ந்து விளக்கங்களைத் தேடுவதால் இப்பகுதி பல தசாப்தங்களாக அறிவியல் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
பெர்முடா முக்கோண மர்மம் : அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகானத்திலுள்ள, ஜாஸ்டன் துரைமுகத்திலிருந்து, நியூயார்க் துரைமுகத்தை நோக்கி 1812 டிசம்பர்30 ம் தேதி பேட்ரியாட் என்ற கப்பல் புறப்பட்டது அது பெர்முடா பகுதியை கடக்கும் பொழுது மாயமானதாக தகவல் தெரிவிக்கின்றது. அந்தக் கப்பலில் இருந்து காணாமல் போனவர்களில் ஒருவர் தியோடீசியா பர் ஆல்ஸ்டன். இவர் அமெரிக்காவின் மூன்றாவது துணை அதிபராக பொறுப்பு வகித்த ஆரோன் பர்ரின் மகள். ஆனால் அக்கப்பலின் நிலை என்ன? என்பது பற்றியும் அதில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன? என்பது பற்றியும் எவ்வித விவரமும் இன்றுவரை கிடைக்கவில்லை.
பெர்முடா முக்கோணத்தின் மர்மம் 1940 களில் ஐந்து அமெரிக்க இராணுவ விமானங்களின் குழுவான Flight-19 காணாமல் போன பிறகு பெரும் கவனத்தைப் பெற்றது. அன்று, கடலில் 15 மீட்டர் உயர அலைகள் எழும்பி, விமானத்திற்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியது. ஃப்ளைட்-19 இன் ரேடியோ டிரான்ஸ்கிரிப்டுகள், விமானங்கள் தங்கள் வழியைத் தொலைத்துவிட்டதை வெளிப்படுத்தின. ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர் க்ருசெல்னிக்கி, இத்தகைய சவாலான நிலைமைகள் மற்றும் சாத்தியமான வழிசெலுத்தல் பிழைகள் விமானத்தின் தலைவிதிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தன, இது பெர்முடா முக்கோணத்தின் புராணக்கதையைத் தூண்டியது.
ஆஸ்திரேலிய விஞ்ஞானியின் விளக்கம் : 2017 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர், பெர்முடா ட்ரையாங்கிளின் மர்மத்தைக் கண்டுபிடித்து விட்டதாகக் கூறினார். கார்ல் க்ருஸ்செல்னிக்கி என்ற அந்த விஞ்ஞானி கூறுகையில், ”இந்த சம்பவங்கள் மனித தவறுகளால் ஏற்படக்கூடும் என்பதால் தீர்க்க எந்த மர்மமும் இல்லை”. என்றார்.
மேலும் "இது பூமத்திய ரேகைக்கு அருகில் உலகின் பணக்கார பகுதியான அமெரிக்காவிற்குப் பக்கத்தில் உள்ளது. எனவே உங்களுக்கு நிறையப் போக்குவரத்து வசதிகளும் உள்ளது. அங்கு ஏற்கனவே நடந்தவை யாவும் மோசமான வானிலை மற்றும் மனித தவறுகளின் விளைவாகவே நடந்திருக்க வேண்டும். இதில் மர்மம் எதுவும் இல்லை” என்றும் அவர் கூறினார்.
Read more ; ATM கார்டு வச்சிருக்கீங்களா? அப்போ ரூ.10 லட்சம் வரை க்ளைம் செய்யலாம்.. எப்படி தெரியுமா?