For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பெங்களூரு மெட்ரோ நிர்வாகம்..!! – பயணியின் ஆடை மீது விமர்சனம்!

08:07 PM Apr 10, 2024 IST | Mari Thangam
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பெங்களூரு மெட்ரோ நிர்வாகம்     – பயணியின் ஆடை மீது விமர்சனம்
Advertisement

சட்டையின் மேல் பட்டன் போடாமல் வந்த நபரை ரயில் ஏறவிடாமல் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அலுவலர் தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

Advertisement

பெங்களூருவின் தொட்டகல்லாசந்திரா மெட்ரோ ரயில் நிலையம் வந்த இளைஞனை ரயில் ஏற விடாமல் மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவரது சட்டை மேல் பட்டன்களை மாட்டச் சொல்லியும், மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் சுத்தமான ஆடைகளுடன் வரவேண்டும் என்றும், அழுக்கான ஆடையணிந்து வந்தால் ரயில் நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

இதனை வீடியோ எடுத்த மற்றொரு பயணி, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த பதிவில் “மீண்டும் ஆடை சர்ச்சை பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. தொழிலாளி ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டு அவரின் சட்டை பட்டன்களை மாட்டுமாறு அறிவுறுத்தப்பட்டார். ‘நம்ம மெட்ரோ’ எப்போது இவ்வாறு எல்லாம் மாறியது?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் தனது பதிவில் பெங்களூரு மெட்ரோ நிர்வாகத்தினரையும், தெற்கு பெங்களூரு எம்.பி தேஜஸ்வி சூர்யாவையும் டேக் செய்துள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “பயணிகளுக்கிடையே எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை. அந்தப் பயணி போதையில் இருந்ததாக அலுவலர்கள் சந்தேகித்தனர். அவர் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தொந்தரவாக இருக்கக்கூடாது என்று தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டார். விசாராணைக்குப் பின்னர் அவர் பயணிக்க அனுமதிக்கப்பட்டார்” என்று தெரிவித்தனர். முன்னதாக, விவசாயி ஒருவரை ரயில் ஏறவிடாமல் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement