எப்புட்றா..!! ஆன்லைனில் ஆர்டர் செய்த லேப்டாப் 13 நிமிஷத்தில் டெலிவரி..!! ஷாக் ஆன கஷ்டமர்..
பெங்களூரில் பிளிப்கார்டில் பெண் ஒருவர் ஆர்டர் செய்த லேப்டாப் ஆனது 13 நிமிஷத்தில் டெலிவரி ஆகியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண் பதிவிட்ட பதிவானது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
ஒரு கடைக்கு நேரடியாக சென்று ஷாப்பிங் செய்வதற்கும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளது. சௌகரியம் மற்றும் பல்வேறு ஆப்ஷன்கள் காரணமாக பலர் தற்போது ஆன்லைன் ஷாப்பிங்கை விரும்புகின்றனர். வீட்டில் இருந்தபடியே எந்த நேரத்திலும் நமக்கு பிடித்தமான பொருட்களை ஆன்லைனில் ஷாப்பிங் செய்து பொருட்களை வீட்டிற்கே வரவழைத்துக் கொள்ளலாம். இதில் நம்முடைய நேரம் மற்றும் முயற்சி மிச்சமாகிறது.
ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில் பல மோசடிகள் நடக்கும் அதே வேளையில், சுவாரஸ்ய சம்பவமும் அவ்வப்போது நடந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, பெங்களூரில் பிளிப்கார்டில் பெண் ஒருவர் ஆர்டர் செய்த லேப்டாப் ஆனது 13 நிமிஷத்தில் டெலிவரி ஆகியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண் பதிவிட்ட பதிவானது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
சன்னி குப்தா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "பிளிப் கார்ட்டில் இப்போதுதான் ஒரு லேப்டாப் ஆர்டர் செய்தேன். 7 நிமிடங்களில் டெலிவரி என்று இருந்தது. ஆர்டர் செய்ததும், சிறிதளவு தாமதம் ஆனதாக காட்டியது. சற்று நேரத்தில் 12 நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும் என அப்டேட் ஆனது. சரியாக 13 நிமிடங்களில் லேப்டாப் டெலிவரி செய்யப்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.
சன்னி குப்தாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளதோடு, தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், 'இதுதான் புதிய இந்தியா... இதுபோன்ற சேவைகளை எல்லாம் மேற்கத்திய நாடுகளிதான் நினைத்து பார்க்க முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், '7 நிமிடத்தில் டெலிவரி செய்யப்பட வேண்டும் என யாரும் கேட்கவில்லை. ஆனாலும் இந்தியாவில் இ - காமர்ஸ் பெற்றுள்ள அசுர வளர்ச்சியும் போட்டி அதிகரித்துள்ளதையும் பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று பதிவிட்டுள்ளார். அதேவேளையில் மற்றொரு நெட்டிசன் கூறும் போது, 'என்னதான் ஆன்லைனில் வேகமாக வாங்கினாலும், ஷோரூமில் பார்த்து பார்த்து வாங்கும் சவுகர்யம் இருக்குமா?' என பதிவிட்டு இருக்கிறார்.
Read more ; 28 சுங்க சாவடிகளின் சுங்கக்கட்டண உயர்வு..!! – அன்புமணி கண்டனம்