முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"பராமரிப்பு பணிகளுக்காக பெங்களூரில் ஜனவரி 23 முதல் 25 வரை மின்வெட்டு" - பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியல்.!

06:42 PM Jan 23, 2024 IST | 1newsnationuser7
Advertisement

பெங்களூர் நகரில் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு பரவலான மின்தடை ஏற்படும் என்று பெங்களூர் மின்சார வாரியம் தெரிவித்திருக்கிறது. பெங்களூர் எலக்ட்ரிசிட்டி சப்ளை கம்பெனி மற்றும் கர்நாடகா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பெங்களூர் நகரின் பல பகுதிகளிலும் மின் பராமரிப்பு பணிகளில் ஈடுபட இருக்கின்றன.

Advertisement

மின்சார இணைப்புகளின் புனரமைப்பு பராமரிப்பு மின்கம்பிகள் மாற்றுதல் புதிய மின்சார கம்பங்களை நிறுவுதல் மின்சார ஒயர்களை நிலத்தடிக்கு மாற்றுதல் மற்றும் மின்சார கம்பிகளின் அருகில் இருக்கும் மரங்களை சரிப்படுத்துதல் போன்ற பராமரிப்பு பணிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக ஜனவரி 23ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை பெங்களூர் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவித்திருக்கிறது. மேலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமலில் இருக்கும் எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. பணிகள் முடியும் காலத்தை பொறுத்து மின்தடைக்கான நேரம் மாறுபடலாம் எனவும் மின்சார வாரியம் தெரிவித்து இருக்கிறது.

இந்தப் பணிகள் காரணமாக மாயசந்திரா, ஜடேயா, ஷெட்டிகவுடனஹள்ளி, சிக்கேஹள்ளி, எட்டிஹள்ளி, விஜயபுரா, ஜகம்கோட்டே, தொட்டபெலவங்களா, குண்டமகெரே, சஸ்லு, EHT ஏர், மஞ்சுநாத்நகரா, சிவநகரா, பிரகாஷ் நகரா, எல்என் புரா, சுப்ரமணியநகரா, ராஜாஜிநகர் 2வது பிளாக், சுப்ரமணியநகரா, ராஜாஜிநகர் 6வது பிளாக் லேஅவுட், ஹம்பி நகர், அக்ரஹாரா, தாசரஹலி, இந்திரா நகரா, 12வது பிளாக், 7வது பிளாக், 11வது பிளாக், RGA உள்கட்டமைப்பு 1 & 2, 9வது A பிளாக், 9வது B பிளாக், இன்டெல் மற்றும் துணை நிலையம் ஆகிய பகுதிகளில் 23 ஜனவரி அன்று மின்தடை ஏற்படும் என தெரிவித்து இருக்கிறது.

மேலும் 24 ஆம் தேதியான நாளை மலேபென்னூர், ஹலிவானா, கும்பலுரு, பூதிஹால், நந்திதாவரே, கொக்கனுரு, கோவினஹல், குனேபெலகெரே, ஹிந்துஸ்கட்டா, குமாரஹனஹள்ளி, குட்டடஹள்ளி, தேவரபெலகெரே, மேலகட்டே, ஜரிகட்டி, முடஹதாடி, சலகட்டி, கே. பெவினஹள்ளி, சடாரவஹள்ளி, சத்ராவஹல்லி BWSSB எஸ்டிபி, ஜக்கசந்திரா, எச்எஸ்ஆர் 5வது செக்டார், டீச்சர்ஸ் காலனி, வெங்கடாபுராவின் ஒரு பகுதி, கிரீனேஜ் அபார்ட்மென்ட் மற்றும் கோரமங்களா விரிவாக்கம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார தடை இருக்கும்.

இதே போல தொட்டபல்லாபுரா டவுன், ராஜ்கட்டா, திப்புரு, ரகுநாதபுரா, தலக்வாரா, கந்த்ராஜபுரா, கொனகட்டா, முத்தநாயக்கனபல்யா, ஹனாபே, எஸ்.எஸ்.காட்டி, அந்தரஹள்ளி, கந்தனகுண்டே, நெரலாகட்டா, ஹடோனஹள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ஒபலாபுரா, தொட்டசரஹல்லிடி, கோரேனேட்கேட் கட்டா, மஹிமாபுரா, லக்கேனஹள்ளி, மேலகத்திகனூர், ஜி ஜி பால்யா, கே அக்ரஹாரா, அரேபொம்மனஹள்ளி, கோடகி பொம்மனஹள்ளி, லக்கசந்திரா, சுல்குண்டே, ஹல்குரு மற்றும் திம்மசந்திரா ஆகிய பகுதிகளில் இன்று முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை மின்தடை ஏற்படும் எனவும் மின்சார வாரியம் அறிவித்திருக்கிறது. மின்சார தடையை கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் பொதுமக்கள் தங்களது பணிகளை அமைத்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags :
Affected AreasBengaluruKarnatakaMaintenance WorkPower Shut Down
Advertisement
Next Article