முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பல் வலி, பல் சொத்தை வராமல் தடுக்க இந்த ஒரு பொருள் போதும்.!?

07:39 AM Feb 08, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக ஒருவருக்கு பற்கள் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. பற்களின் ஆரோக்கியத்தை சரியாக பாதுகாக்காவிட்டால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக பல்வலி, பல் சொத்தை, பல் கூச்சம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் போது தாங்க முடியாத அளவிற்கு வலி உண்டாகும். இதனாலேயே தினமும் இருவேளைகளிலும் பல்துலக்கி சுத்தமாக பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில் வாரத்திற்கு 3 நாட்கள் காலையிலும், இரவிலும் கிராம்பை பொடி செய்து பல துலக்கி வந்தால் பற்களில் உள்ள கிருமிகள் நீங்கி பல் சுத்தமாகும். இதனால் பல் சொத்தை, பல் கூச்சம் குணமாகும். மேலும் கிராம்பில் உள்ள யூஜினால் என்ற வேதிப்பொருள் வலி நிவாரணியாக செயல்பட்டு பல் வலி இருந்தாலும் அதை சரி செய்கிறது.

மேலும் ஒரு சிலருக்கு கிராம்பில் உள்ள அதிகப்படியான காரத்தன்மை வாயில் புண்களை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட. நபர்கள் கிராம்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் பல் துலக்கிய பின்பு ஊற வைத்த தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்து வர வேண்டும். இவ்வாறு செய்வதால் கிராம்பின் காரத்தன்மை குறைந்து வாய்ப்புண் ஏற்படாமல் இருப்பதோடு வாயில் உள்ள கிருமிகளும் நீங்கும்.

Tags :
cloveshealthyTeeth
Advertisement
Next Article