மதிய நேரத்தில் குட்டி தூக்கம் போடுறீங்களா.!? உங்களுக்குத்தான் இந்த செய்தி.!
இரவு நேரத்தில் தூங்குவதை விட மதியநேர சாப்பாட்டிற்கு பின்பு குட்டி தூக்கம் போடுவது பலருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. எப்போதும் மதிய உணவிற்கு பின் உடல் மந்தமாவும், சோர்வாகவும் இருக்கும்.
அந்த நேரத்தில் நன்றாக தூங்குவது உடலுக்கு கேடு என்று பலர் கூறி வருகின்றனர். மதிய நேரத்தில் நீண்ட நேரம் தூங்குவது நல்லதல்ல. இது இரவு தூக்கத்தை பாதிப்பதோடு, தூக்கமின்மை பிரச்சனையையும் தருகிறது.
ஆனால் சாப்பிட்டவுடன் மதிய நேரத்தில் 2மணி நேரம் மட்டுமே தூங்குவது உடலில் சுறுசுறுப்பை ஏற்படுத்தும். இவ்வாறு மதியத்தில் குட்டி தூக்கம் தூங்குவது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மூளை வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
மனநோய் பிரச்சனை இருப்பவர்கள் மதிய நேரத்தில் குட்டி தூக்கம் போடுவதால் நேர் மறையான மனநிலையை அதிகப்படுத்தி மனப்பதட்டம், கோவம் போன்றவை குறையும். பொறுமை அதிகரிக்கும் என்று வல்லுனர்கள் பலர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.