முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாம் மறந்து போன பழைய சாதத்தில்.. இவ்வளவு நன்மைகளா.! எந்த உணவிலும் இல்லாத சத்து.!

07:36 AM Jan 19, 2024 IST | 1newsnationuser5
Advertisement

மிக மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று பழைய சோறு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் நிஜம். முதல் நாள் செய்த சாப்பாட்டில் தண்ணீரை ஊற்றி இரவு முழுவதும் அதை ஊற வைத்து மறுநாள் அதை குடிப்பது பல்வேறு நோய்களுக்கு தீர்வு தரும். மற்ற உணவு பொருட்களில் இல்லாத விட்டமின் பி11, பி12 ஆகிய சத்துக்கள் பழைய சோற்றில் அதிக அளவில் நிரம்பி உள்ளது. அதில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இதை சாப்பிடுவதன் மூலம் நமது செரிமான பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து செரிமான மண்டலம் மேம்படுகிறது. 

Advertisement

பழைய சாதத்தில் நோய் எதிர்ப்பு காரணிகளை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. எனவே இது நோய் கிருமிகளிடமிருந்து நம்மை காப்பாற்றுகிறது. மாலை நேரத்தில் இந்த பழைய சோறை சாப்பிட்டால் வயிறு குறித்த பிரச்சினைகள் அனைத்தும் காணாமல் போகும். உடலில் சூடு அதிகமாக இருக்கும் நபர்கள் இதை சாப்பிடுவது உடலை குளிர்ச்சியாக்கும். வயிற்றுப்போக்கு, வயிற்று கடுப்பு தொந்தரவு இருப்பவர்கள் இதை சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு பழைய சாதம் ஒரு அருமருந்து. தோல் வியாதிகள் மற்றும் ஒவ்வாமை பிரச்சினை இருப்பவர்களுக்கு பழைய சாதம் சாப்பிடுவது நல்ல பலனை கொடுக்கும்.

Tags :
health tipsIce briyaniPazhaiya sadham
Advertisement
Next Article