For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செம்பருத்தி பூ மற்றும் இலையினால் தலை முதல் கால் வரை இவ்வளவு நன்மைகளா.! என்னென்ன தெரியுமா.?!

08:21 AM Jan 17, 2024 IST | 1newsnationuser5
செம்பருத்தி பூ மற்றும் இலையினால் தலை முதல் கால் வரை இவ்வளவு நன்மைகளா   என்னென்ன தெரியுமா
Advertisement

செம்பருத்தி பூ மற்றும் இலைகளை நமது சருமத்தின் ஆரோக்கியத்திற்காகவும், முடியும் வளர்ச்சிக்காகவும் பலரும் பயன்படுத்தி வருகிறோம். மேலும்  செம்பருத்தி இலை மற்றும் பூ பயன்படுத்துவதன் மூலம் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

Advertisement

1. செம்பருத்தி இலையை அரைத்து கை கால்களில் பூசி வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
2. செம்பருத்தி பூ, இலை, தேங்காய் எண்ணெய் மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்து குளிர்காலம் மற்றும் வெயில் காலத்திற்கு தேவையான லோஷனாகவும் பயன்படுத்தி வரலாம்.
3. முடி உதிர்தல், பொடுகு தொல்லை, நரை முடி போன்ற பிரச்சனைகளுக்கு செம்பருத்தி பூ மற்றும் இலையை அரைத்து தேய்த்து வந்தால் இந்த பிரச்சனைகள் சரியாகும்.
4. செம்பருத்தி பூவை தேநீராக தயாரித்து தினமும் காலையில் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தத்திலிருந்து நம்மை பாதுகாக்கலாம்.
5. செம்பருத்தி டீ யில் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் அதிகம் உள்ளதால் தோலில் வயதான தோற்றம் விரைவில் ஏற்படாமல் தடுக்கலாம்.
6. செம்பருத்தி இலையில் கஷாயம் செய்து குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புகள் நீங்கி உடல் எடை குறையும்.
7. செம்பருத்தி இலை கசாயம் கண் சம்பந்தப்பட்ட நோய்களான கண்ணில் நீர் வடிதல், கண் எரிச்சல், கண் கட்டி போன்ற பிரச்சனைகளையும் சரி செய்யும்.
8. செம்பருத்தி இலையை அரைத்து பல்வலி உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் வலி குறையும்.
9. சிறுநீர்ப்பாதை தொற்றிற்கு சிறந்த மருந்தாக செம்பருத்தி இலை கசாயம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தலை முதல் கால் வரை பல்வேறு நன்மைகளை தரும் செம்பருத்தி இலை மற்றும் பூவை பயன்படுத்தி நோயற்ற வாழ்வை வாழலாம்.

Tags :
Advertisement