இனி சப்பாத்தி சுடும் போது ஒரு ஸ்பூன் நெய் தடவுங்க... கேன்சரை கூட தடுக்கலாமாம்..
நாம் அன்றாடம் கிச்சனில் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று நெய். பொதுவாக நாம் நெய்யை சுவைக்காக தான் பயன்படுத்துவோம். மேலும் சிலர் தங்களின் உடல் எடையை அதிகரிக்க நெய் பயன்படுத்துவது உண்டு. இது ஒரு பக்கம் இருந்தாலும், நெய் சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதிலும் குறிப்பாக, சப்பாத்தியை சமைத்த உடன் அதில் நெய் தடவுவது நமது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. ஆம், சப்பாத்தியில் நெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நெய்யில் அதிக ப்யூட்ரேட்டின் உள்ளது. நமது குடல் இயக்கத்தை பராமரிக்க நெய் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், குடல் சுவரை வலுப்படுத்தி, ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஆதரிக்கிறது. இதனால் நீங்கள் சப்பாத்தி மீது நெய் தடவினால், செரிமான மண்டலத்தை பலப்படுவதோடு, குடல் இயக்கம் சீராக இருக்கும். இதில் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை இருப்பதால், இவை உடலின் செயல்பாடுகளை சீராக்கும்.
நெய்யில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும். மேலும் இதில் உள்ள லினோலிக் அமிலம் (CLA), இது அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நெய்யை தினமும் உட்கொள்வது புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க முடியும். மேலும் நீங்கள் சப்பாத்தியில் நெய் தடவுவதால், இதில் உள்ள வைட்டமின் K2, மற்ற மூலங்களிலிருந்து கிடைக்கும் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உங்கள் உடலை தயார்செய்கிறது. இதனால் எலும்புகள் பலமாக இருக்கும். இது மட்டும் இல்லாமல், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பல்வேறு மருத்துவ நிலைமைகளை தடுக்கிறது.
Read more: தொப்பையை சுலபமாக குறைக்க வேண்டுமா?? அப்போ தொடர்ந்து இந்த காய் சாப்பிடுங்க..