ஒரே பூவில் இத்தனை நோய்களுக்கும் தீர்வா.! என்னென்ன நோய்களை சரிசெய்யும் தெரியுமா.!?
இந்தியாவில் வளரும் பாரிஜாத பூ வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கி பார்ப்பவரின் மனதை கொள்ளையடிக்கும். பாரிஜாத பூ மற்றும் இலையில் உள்ள மருத்துவ குணங்கள் நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை தீர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. ஒரே பூவில் எத்தனை நோயை தீர்க்கும் மருத்துவ குணம் உள்ளதா என்பது குறித்து பார்க்கலாம்?
ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படும் மூலிகைகளில் முக்கியமானது பாரிஜாத பூ தான். இந்த பூ மற்றும் இலைகளில் பிரக்டோஷ், பென்சாயிக் அமிலம், கரோட்டின், குளுக்கோஸ், சாலிசிலெட், டனாட் அமிலம், பிளவனால் கிளைகோசைடு போன்ற உடலுக்கு பயன்படும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
பாரிஜாத பூ மற்றும் இலைகளின் பயன்கள்
1. உடலில் ஏற்படும் வலி, இரத்தக்கட்டு, வீக்கம் போன்றவற்றை குறைக்கிறது.
2. இந்த இலையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யில் பென்சோயிக் அமிலம், கரோட்டின் போன்றவை இருந்து வருவதால் இது அலர்ஜியை போக்குகிறது.
3. ஆயுர்வேத மருத்துவத்தில் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு அருமருந்தாக பாரிஜாத இலைகள் பயன்படுகிறது. இந்த இலைகள் ஆன்ட்டிஆக்சிடெண்ட் கள் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
4. ஆண்டி ஆத்ட்ரிக் நிறைந்துள்ள இலையை கீழ்வாத நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் பயன்படுத்தி வர நோய் குணமாகும்.
5. நுரையீரலில் ஏற்படும் நோய்கள் மற்றும் புற்று நோயை அளிப்பதற்கு பாரிஜாத இலைகள் உபயோகப்படுகிறது.
6. பாரிஜாத இலைகளை, இஞ்சியுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து தேன் ஊற்றி குடித்து வந்தால் வரட்டு இருமல், சளி இருமல் உடனே குணமாகும்.
7. தினமும் காலையில் இந்த இலையை டீ போன்று தயாரித்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
8. இந்த இலையில் ஆன்ட்டி டயாபட்டிக் தன்மை உள்ளதால் உடலில் ஏற்படும் அதிகப்படியான சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
9. குடல் புழுக்கள், வயிற்று வலி, வயிற்றுபோக்கு போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
10. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலியை சரி செய்கிறது.
11. தலையில் உள்ள பேன், பொடுகு, முடி உதிர்தல் போன்றவற்றை குணப்படுத்துகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய பாரிஜாத பூவை பயன்படுத்தி உடலில் ஏற்படும் நோயை குணப்படுத்தலாம்.