தினமும் துளசி சாப்பிடுவதால் மனதிற்கும், உடலுக்கும் கிடைக்கும் அளப்பரியா நன்மைகள்.!
துளசி செடி ஒரு தெய்வீக செடியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தச் செடியில் நம் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருப்பதோடு துளசிச்செடி சிறந்த நோய் நிவாரணியாகவும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இது தெய்வீக பண்பு மற்றும் மருத்துவ குணம் ஆகியவற்றோடு சுக்கு புறச் சூழலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எந்த காய்ச்சலாக இருந்தாலும் துளசி இலைகளை சிரிக்க வைத்து குடித்து வர குணமாகும். வாய் துர்நாற்றம் அஜீரணக் கோளாறு மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கும் துளசிச்செடி சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தினமும் துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் நோய் நொடியின்றி என்றென்றும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். துளசிச்செடி சிறந்த நோய் நிவாரணையாக இருப்பதோடு சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
துளசிச் செடியின் இலைகளை தினமும் சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பற்களில் மற்றும் வாயில் இருக்கும் கிருமிகள் நீங்குவதற்கும் வாயின் ஆரோக்கியம் பேணப்படுவதற்கும் முக்கிய பங்கு வைக்கிறது. துளசிச் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வறட்டு இருமல் மற்றும் சளி போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம். துளசி இலையை நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து உடலில் பூசி வர சொறி சிரங்கு மற்றும் படை தொற்றுகள் ஏற்படாது.
தினமும் காலையில் 10 துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் நமக்கு அண்டாது என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. துளசியிலை மனக்குழப்பம் மற்றும் மனப்பதற்றம் போன்ற நோய்களுக்கும் சிறந்த நிவாரணையாக இருக்கிறது. துளசிச் செடிகளை வீட்டில் வளர்க்கும் போது இவற்றின் காற்று ஆரோக்கியமான சூழலையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது. துளசிச் செடிகள் இதயம் மற்றும் ரத்த சுத்திகரிப்பிலும் முக்கிய பங்கு வைக்கின்றன. தினமும் துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் நீங்குவதாக பண்டைய மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றன.