பார்க்க அழகாகவும், சாப்பிட புளிப்பாகவும் இருக்கும் ஸ்ட்ராபெரி பழம் இவ்வளவு நோய்களை தீர்க்குமா.!?
பொதுவாக பழங்கள் என்றாலே பல்வேறு நன்மைகளையும், ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களையும் நமக்கு வழங்குகிறது. அந்த வகையில் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடைய சிவப்பு நிறத்தில் இருக்கும் ஸ்ட்ராபெரி பழம் பலருக்கும் பிடிக்காது. ஆனால் இந்த பழத்தில் பல்வேறு நன்மைகளும், நோயை தீர்க்கும் குணங்களும் இருக்கின்றன. அவை என்ன என்பதை குறித்து பார்க்கலாம்?
1. ஸ்ட்ராபெரி பழம் உடலில் இறந்த செல்களை அழித்து தோலின் வறட்சியை நீக்குகிறது.
2. வெயில் மற்றும் மழைக்காலங்களில் உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்பட்டால் ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிட்டு வர குறைபாடு சரியாகும்.
3. ஸ்டாபெரி பழத்தில் அதிகப்படியான நார் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது செரிமானத்தை சரி செய்து, மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது.
4. குறிப்பாக ஸ்டாபெர்ரி பழம் சாப்பிடுவதால் ப்ரீரேடிக்கல் என்ற செல்களை ரத்தத்தில் கலக்கவிடாமல் புற்று நோய் உருவாகாமல் தடுக்கிறது.
5.ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்கள் அதிகம் கொண்டுள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி தொற்று கிருமிகள் உடலை தாக்காமல் பாதுகாக்கிறது.
6. ஸ்ட்ராபெரியில் வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் சி, அயோடின், ஆர்ஜினின், செலீனியம், போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் ரத்த நாளங்கள், தைராய்டு சுரப்பி, உணவு பாதை போன்றவை சீராக இயங்க உதவி செய்கிறது.
7. சூரிய கதிரில் இருந்து தோலை பாதுகாக்கவும், தோலில் ஏற்பட்ட தழும்புகள், புண்கள், பருக்கள் போன்றவற்றை சரி செய்யவும் ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிட்டு வரலாம். இவ்வாறு பல்வேறு நன்மைகளை உடைய ஸ்ட்ராபெரி பழத்தை தனியாக சாப்பிட முடியாவிட்டாலும் சாலட் போன்று செய்து சாப்பிட்டு வரலாம்.