For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முதுகு வலி, மூட்டு தேய்மானம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் விளாம்பழம்…!

07:23 AM Mar 02, 2024 IST | 1newsnationuser5
முதுகு வலி  மூட்டு தேய்மானம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் விளாம்பழம்…
Advertisement

vilambalam: பொதுவாக பலவகையான ஊட்டச்சத்து நிறைந்த பழங்களை நாம் சாப்பிட்டு இருந்தாலும் பலரும் விளாம்பழத்தை சாப்பிட்டிருக்க மாட்டோம். ஆனால் இந்த விளாம்பழத்தில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற ஊட்டசத்துகள் நிறைந்துள்ளன. இந்த பழம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் பாதிக்காமல் பாதுகாக்கிறது. மேலும் இந்த விளாம்பழம் உடலில் என்னென்ன நோய்களை குணப்படுத்தும் என்பதை குறித்து பார்க்கலாம்?

Advertisement

1. விளாம்பழம் அடிக்கடி சாப்பிடும் போது குடல் புண்கள், குடல் வாழ்வு போன்ற குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
2. செரிமான மண்டலத்தை சீர்படுத்தி மலச்சிக்கல், அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
3. வயிற்றுப்புண், வாய்ப்புண், தொண்டை எரிச்சல் போன்றவற்றிற்கு அருமருந்தாக இந்த பழம் இருக்கிறது.
3. கால்சியம் சத்து அதிகமாக உள்ள விளாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, முதுகு வலி, மூட்டு தேய்மானம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பதோடு பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமையை தருகிறது.
4. விளாம்பழத்தை தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலம் பெறும்.
5. விளாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அதிகரித்து ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
6. மாதவிடாய் காலத்தில் அதிகமான உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
7. விளாம்பழத்தை வெள்ளத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை நீங்கும்.
8. விளாம்பழம் குழந்தைகளுக்கு தருவதன் மூலம் நினைவாற்றல், பேச்சுத்திறமை, கற்றல் திறமை போன்றவை அதிகரிக்கும்.
9. விளாம்பழத்தை காயவைத்து குளியல் பொடி தயாரித்து குளித்து வந்தால் தோல் பிரச்சனை, வறட்சி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் சரியாகும். இவ்வாறு விளாம்பழத்தை தொடர்ச்சியாக தயிர் அல்லது வெல்லத்துடன் 21 நாட்கள் சாப்பிட்டு வர மேற்கூறிய நோய்களை குணப்படுத்தலாம் என்று முன்னோர்கள் கூறியுள்ளன

Read more : இந்த உணவுகள் எல்லாம் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாகும்.?  ஏன் தெரியுமா.!?

Tags :
Advertisement