முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் பீர்க்கங்காய்.! வேறு என்னென்ன நன்மைகளை தரும் தெரியுமா.!

05:40 AM Feb 01, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக காய்கறிகள் என்றாலே நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருளாகவே இருந்து வருகிறது. இந்த வகையில் குறிப்பாக பீர்க்கங்காயை நம்மில் பலரும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதில்லை ஆனால் பீர்க்கங்காயில் பல்வேறு நோய்களை தீர்க்கும் நன்மைகள் இருந்து வருகின்றன. அவை என்ன என்பதை குறித்து பார்க்கலாம்?

Advertisement

பீர்க்கங்காய் செடியில் உள்ள இலை, வேர், விதை என அனைத்துமே மருத்துவ குணம் மிக்கதாக கருதப்பட்டு வருகின்றது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் பீர்க்கங்காய் இலையை எடுத்து சாறு பிழிந்து லேசாக தண்ணீர் விட்டு சூடு படுத்தி தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்.

பீர்க்கங்காயில் அனைத்து விதமான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து போன்றவை அதிகமாக இருந்து வருவதால் உடலை தாக்கும் பல்வேறு தொற்று கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. மேலும் பீர்க்கங்காயை சாராக குடித்து வந்தால் மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய்கள் குணமடையும்.

பொதுவாக பாகற்காய் தான் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டும் என்று பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பாகற்காய் கசப்பு சுவையில் இருப்பதால் பலருக்கும் பிடிக்காது. இப்படிப்பட்டவர்கள் அடிக்கடி உணவில் பீர்க்கங்காயை சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளின் உடலில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags :
BenefitsDiabeticRidge gourd
Advertisement
Next Article