சிவப்பு கொய்யா பழத்தில் இவ்வளவு நன்மைகளா.! என்னென்ன நோய்களை தீர்க்கும் தெரியுமா.?!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிவப்பு கொய்யாவில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த சிவப்பு கொய்யாவை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய்களை தீர்க்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக சிவப்பு நிற கொய்யாவில் வைட்டமின் பி, வைட்டமின் ஏ, பி 3, பி 6, வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளதால் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், சரும நோய் உள்ளவர்களுக்கும் மிகப்பெரும் வரப் பிரசாதமாக இருந்து வருகிறது.
மேலும் தற்போதுள்ள காலகட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு பலருக்கும் ஏற்படுகிறது. இதனை ஆண்ட்டிஆக்ஸிடெண்ட்கள் அதிகம் நிறைந்துள்ள சிவப்பு நிற கொய்யாப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
'வைட்டமின் சி' சிவப்பு நிற கொய்யாவில் அதிகம் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இவ்வாறு சத்து நிறைந்த பழங்களை உண்பதன் மூலம் நோயற்ற வாழ்வை பெற்று நிறைவாக வாழலாம்.