இந்த விஷயம் தெரிந்தால் இனி பரங்கிக்காயை வீணாக்க மாட்டீங்க.!?
பொதுவாக தமிழ் நாட்டில் பலரும் பரங்கிக்காய் என்ற பூசணிக்காயை திருஷ்டிகாக நடுரோட்டில் உடைக்கின்றனர். இவ்வாறு வீணாக்கபடும் பரங்கிக்காயில் பலவிதமான நன்மைகள் உள்ளன. பூசணிக்காயில் இரண்டு வகை இருக்கின்றன. ஒன்று வெண்பூசணி மற்றொன்று சர்க்கரை பூசணி இந்த சர்க்கரை பூசணியை தான் பரங்கிக்காய் என்று கூறுகிறோம். இந்த பரங்கிக்காயில் என்னென்ன நோய்களை தீர்க்கும் மருத்துவ குணநலன்கள் உள்ளன என்பதை குறித்து பதிவில் பார்க்கலாம்?
1. வைட்டமின் ஏ அதிகமாக இருக்கும் பரங்கிகாயை உணவாக எடுத்துக் கொள்ளும் போது கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும்.
2. வைட்டமின் சி மற்றும் பி அதிக அளவு உள்ளதால் பரங்கிக்காயை சாப்பிடும் போது உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
3. சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிக்கடி சூடு பிடித்துக் கொள்வது போன்ற பிரச்சனை இருப்பவர்கள் பரங்கிக்காய் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சீராக செயல்பட உதவுகிறது.
4. பரங்கிக்காயை ஜூஸாக குடிக்கும் போது இதில் உள்ள பெக்டின் என்ற வேதிப்பொருள் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைக்கிறது.
5. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையை தீர்க்கும் மருத்துவ குணம் பரங்கிக்காயில் அதிகமாக உள்ளது.
6. தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பரங்கிக்காயை தினமும் இரவில் ஜூஸாக குடித்து வந்தால் பிரச்சனை தீரும்.
7. கல்லீரல் வீக்கம் நோயை சரி செய்து கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
8. தீப்புண்கள் உடலில் ஏற்படும் கொப்புளங்கள், கட்டிகள் போன்றவற்றை குணப்படுத்தும் வல்லமை இதற்கு உண்டு.
9. பசியை அதிகரித்து செரிமான மண்டலத்தை சீராக செயல்பட உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனையும் சரி செய்யும்.
10. பரங்கிக்காயை சாறு எடுத்து தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி உதிர்வது நின்றுவிடும். முடி நன்றாகவும் வளரும். இவ்வாறு பல்வேறு நண்மைகையுடைய பரங்கிகாயை வீணாக்காமல் உணவில் சேர்த்தால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்.