மாரடைப்பை தடுக்கும் அன்னாசிப்பழம்.! வேறு என்னென்ன நோய்களை தீர்க்கும் தெரியுமா.!?
பொதுவாக பழங்களில் நம் உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில் அன்னாசிப்பழத்தில் நம் உடலில் தலை முதல் கால் வரை ஏற்படும் பல்வேறு வகையான நோய்களையும் தீர்க்கும் சக்தி உள்ளது. இந்த பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
அண்ணாச்சி பழத்தை உண்பதால் ஏற்படும் நன்மைகள்
1. வைட்டமின் சி அண்ணாச்சி பழத்தில் நிறைந்துள்ளதால் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
2. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து இதயத்திற்கு செல்லும் ரத்தத்தை சீராக்க உதவுகிறது.
3. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அண்ணாச்சி பழத்தை தினமும் காலையில் சாப்பிடலாம்.
4. புற்று நோயை உருவாக்கும் செல்களை அண்ணாச்சி பழத்தில் உள்ள புரோமொலைன் என்ற வேதிப்பொருள் முற்றிலுமாக அளிக்கிறது.
5. குறிப்பாக செரிமான மண்டலத்தை சீராக்கி குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
6. குளிர்காலத்தில் தோலில் ஏற்படும் வறட்சி, அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
7. வெயில் காலத்தில் சூடு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் நீர் இழப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
8. அன்னாசி பழத்தை சாப்பிடுவதன் மூலம் இதில் நிறைந்துள்ள அதிகப்படியான பொட்டாசியம் உடலில் கலந்து உயர் அழுத்த அழுத்த பிரச்சனையை முற்றிலுமாக சரி செய்கிறது.
9. சளி, இருமல், ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் சரி செய்கிறது.
இவ்வாறு உடலில் ஏற்படும் பல்வேறு வகையான பிரச்சனைகளை இந்த அண்ணாச்சி பழம் சாப்பிடுவதன் மூலம் எளிமையாக தீர்க்கலாம் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.