முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தொங்கும் தொப்பை உடனடியாக குறைக்க, பப்பாளியை இப்படி சாப்பிட்டு பாருங்க.!?

07:40 PM Mar 08, 2024 IST | 1newsnationuser5
Advertisement

அந்த காலத்தை விட தற்போது உள்ள காலத்தில் உடல் எடை பலருக்கும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதனால் நோய் பாதிப்புகளும் அதிகமாகியுள்ளன. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு பலரும்  பலவிதமான முயற்சி செய்து வருகின்றனர். உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது மிகவும் முக்கியமான பிரச்சினையாக இருந்து வருகிறது.

Advertisement

உடல் எடை அதிகமாக இருப்பதால் உடலில் பலவிதமான நோய்களும், மனதளவில் பாதிப்புகளும் உருவாகின்றன. அன்றாடம் உடற்பயிற்சியுடன், உணவு கட்டுப்பாட்டை சரியாக பின்பற்றி வந்தால் எளிதாக உடல் எடையை குறைக்கலாம். ஆனால் பலருக்கும் அவர்களது வாழ்க்கை முறையினால் உணவு கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் பப்பாளி பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். எப்படி என்பதை குறித்து பார்க்கலாம்?

பப்பாளியில் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது. இதனால் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்த நாளங்களில் இருக்கும் கொழுப்புகளை நீக்குகிறது. எனவே பப்பாளியை தினமும் உணவாக எடுத்துக் கொள்ளலாம். காலை, மாலை, மதியம் என மூன்று வேளைகளில் ஒரு வேளை உணவாக பப்பாளியை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

மேலும் பப்பாளி சாப்பிடும் போது அதிகப்படியான பசி ஏற்படுவதை கட்டுப்படுத்தி அதிக உணவு உட்கொள்வதை குறைக்கிறது. பப்பாளி மற்றும் அன்னாசி பழம் இரண்டையும் கலந்து நன்றாக அரைத்து ஜூஸாக செய்து குடித்தால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. பலருக்கும் அவ்வப்போது நொறுக்கு தீனி சாப்பிடுவது வழக்கமாக இருக்கும் அந்த மாதிரி நேரங்களில் நொறுக்கு தீனிக்கு பதிலாக பப்பாளியை சாலட் போல செய்து சாப்பிடலாம்.

Tags :
BenefitsfruitsPapaya
Advertisement
Next Article