உடல் எடையை விரைவாக குறைக்க உதவும் பன்னீர்.! வேறு என்னென்ன நோய்களை தீர்க்கும் தெரியுமா.!?
பொதுவாக பன்னீர் சைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தமான உணவு பொருளாக இருந்து வருகிறது. இந்த பன்னீரை பாலில் இருந்து தயாரிக்கின்றனர். பன்னீரில் வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டசத்துகள் நிறைந்துள்ளன. சைவ உணவு பிரியவர்களின் உணவு பட்டியலில் பன்னீர் முக்கிய இடத்தை பிடிக்கிறது.
பன்னீரில் பல வகையான ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்கள் போன்ற சத்துக்கள் நிறைந்து ஊட்டச்சத்துக்களின் சுரங்கமாக இருந்து வருகிறது.
பன்னீர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
1. உடலுக்கு தேவையான பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
2. கால்சியம் சத்து பன்னீரில் அதிகமாக காணப்படுவதால் இதை சாப்பிடுவதன் மூலம் எலும்புகளை பலப்படுத்துகிறது.
3. பன்னீரில் மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருப்பதால் இது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
4. பேலியோ டயட் முறையின் மூலம் உடல் எடையை குறைப்பவர்களுக்கு பன்னீர் ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.
5. அதிகளவு புரதச்சத்து நிறைந்த பன்னீரை சாப்பிடுவதன் மூலம் தோலில் பளபளப்பையும், முடி உதிர்தல், தலையில் வறட்சி போன்ற பிரச்சினைகளையும் கட்டுப்படுத்துகிறது.
6. ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் மேலும் கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெறுவதற்கு பன்னீர் பெரிதும் உதவி புரிகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளை பன்னீர் உடலுக்கு தருகிறது.