For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

70 வயதிலும் எழுந்து ஓட வைக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு.? எப்படி பயன்படுத்தலாம்.!?

08:44 AM Mar 13, 2024 IST | 1newsnationuser5
70 வயதிலும் எழுந்து ஓட வைக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு   எப்படி பயன்படுத்தலாம்
Advertisement

பொதுவாக கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3500 அடி உயரத்தில் மேல் அமைந்துள்ள மலைப்பகுதிகளின் பாறைகளில் சந்துகளில் மட்டுமே கிடைத்து வருகிறது. ஏற்காடு, கொல்லிமலை போன்ற பகுதிகளில் இந்த முடவாட்டுக்கால் கிழங்கை சூப் செய்து அதிகமாக விற்று வருகின்றனர். ஆனால் முடவாட்டுக்கால் கிழங்கு தற்போது அனைத்து பகுதிகளிலும் சாதாரணமாக கிடைக்க ஆரம்பித்து விட்டது. அந்த அளவிற்கு முடவாட்டுக்கால் கிழங்கில் பல்வேறு நன்மைகள் நம் உடலுக்கு கிடைத்து வருகின்றன.

Advertisement

ஆட்டுகால், முடவன் ஆட்டுக்கால், சைவ ஆட்டுக்கால், ஆட்டுகால் கிழங்கு என்று பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படும், இந்த முடவாட்டுக்கால் கிழங்கில் என்னென்ன நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது என்பதையும், எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்?

1. முடவாட்டுக்கால் கிழங்கில் அதிகப்படியான கால்சியம் நிறைந்துள்ளதால் இது மூட்டு வலி, முதுகு வலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கிறது.
2. நார்ச்சத்து நிறைந்துள்ள முடவாட்டுக்கால் கிழங்கை உணவாக எடுத்துக் கொள்ளும்போது செரிமான பிரச்சனை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, குடல் பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
3. குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிறு வலி, அதிகப்படியான இரத்தப்போக்கு, போன்றவற்றை சரி செய்கிறது.
4. இதய நோயினால் ஏற்படும் பக்கவாதம் மற்றும் முடக்கு வாதம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.
5. வயதான காலத்தில் ஏற்படும் மூட்டு தேய்மானத்தை சரி செய்ய முடவாட்டுக்கால் கிழங்கை அடிக்கடி உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
6. குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும் முடவாட்டுக்கால் கிழங்கை காய வைத்து பொடி செய்து வருடம் தோறும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அல்லது பச்சை கிழங்கை வாங்கி ஆட்டு கால் சூப் போல செய்து குடித்து வந்தால் உடலில் பல்வேறு நோய்களையும் குணப்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

Tags :
Advertisement