புற்றுநோயை தடுக்கும் கொடுக்காப்புளி.! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா.!?
90ஸ் கிட்ஸிற்கு மிகவும் பிடித்தது இந்த கொடுக்காப்புளி. 90ஸ் கிட்ஸ் அனைவரும் சிறுவயதில் வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் கொடுக்காப்புளி பறித்து சாப்பிட்டு இருப்போம். இதன் சுவை தற்போதுள்ள குழந்தைகளுக்கு தெரிவதில்லை. தற்போது கடைகளில் கூட கொடுக்காப்புளியை அதிகம் காண முடிவதில்லை.
குறிப்பாக இதன் சுவையை விட இதில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது என்பதால் ஏழைகளின் ஆப்பிள் என்று இதை வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இதில் என்னென்ன நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் உள்ளது என்பதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
1. மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, உடல் வலி போன்றவற்றை சரி செய்கிறது.
2. மன அழுத்தம், மனச்சோர்வை ஏற்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது.
3. பெண்களுக்கு முகத்தில் ஏற்படக்கூடிய , மங்கு, முகப்பரு, கரும்புள்ளி, தேமல், போன்றவற்றை குணப்படுத்தி முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புது செல்கள் வளர செய்கிறது.
4. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் அழித்து உடலில் கேன்சர் உருவாகாமல் பாதுகாக்கிறது.
5. நிரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் தினமும் இதை சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
6. கல்லீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது.
7. மலேரியா காய்ச்சல் இருக்கும் போது இதை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோயை கட்டுப்படுத்தும்.
8. கர்ப்பிணி பெண்கள், புதிதாக குழந்தை பிறந்த தாய்மார்கள் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது. இவ்வாறு அதிகளவு ஊட்டசத்துகள் உள்ள கொடுக்காபுளியை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.