தலை முதல் கால் வரை நன்மைகள் பல தரும் வெல்லம்.? இந்த நோய்களை எல்லாம் தீர்க்குமா.!?
குளிர்காலத்தில் பலருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும். குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை நம் உணவில் ஒரு சில பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிகப்படுத்தலாம்.
குறிப்பாக பலரது வீட்டிலும் இருக்கும் வெல்லத்தை சர்க்கரைக்கு பதிலாக உபயோகப்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கின்றது. வெல்லம் பயன்படுத்துவது குளிர் காலத்தில் உடலுக்கு தேவையான சூட்டை தருகிறது.
1. வயிற்றுப்போக்கு பிரச்சினையையும், செரிமானம் தொடர்பான கோளாறுகளுக்கும் வெல்லம் அருமருந்தாக பயன்பட்டு வருகிறது.
2. குளிர்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் இருமலை போக்குவதற்கு வெல்லம் உதவுகிறது.
3. சருமத்தில் ஏற்படும் வறட்சியை போக்க வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து முகத்தில் தேய்த்து வரலாம்.
4. மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்வதோடு, இதய ஆரோக்கியத்தையும் காக்கிறது.
இவ்வாறு பல்வேறு உடல் நோய்களுக்கு தீர்வாக இருக்கும் வெல்லத்தை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.