ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா!!! இனி நீங்க கட்டாயம் ஐஸ்க்ரீம் சாப்பிடுங்க..
ஐஸ்கிரீம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு பொருள் என்றால் அது ஐஸ்கிரீம் தான். ஆனால் அதை சாப்பிட்டால் சளி பிடித்து விடும், உடலுக்கு நல்லது அல்ல, உடல் எடை அதிகரிக்கும் போன்ற பல காரணங்களால் பல ஐஸ்க்ரீம் சாப்பிட தயங்குவார்கள். ஆனால் அது உண்மை இல்லை. ஆம், உண்மை தான். ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக ஐஸ்க்ரீமில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் கொண்ட உணவு என்பதால் இதை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்து எப்போதும் இருக்கும். ஆனால் உண்மையில், ஐஸ்கிரீம் சாப்பிடும் போது எடை குறையும்.
ஐஸ்கிரீம் மிகவும் குளிர்ச்சியான உணவு என்பதால், உங்கள் உடலில் இருக்கும் குளிர்ச்சியான டெம்பரேச்சரை மாற்றி, சாதாரண தட்ப வெப்ப நிலைக்கு கொண்டு வருவதற்கு உடல் கூடுதல் கலோரிகளை எரிக்கும். அதனால் உங்கள் எடை குறையும். அதற்காக தினமும் பவுல் நிறைய ஐஸ்கிரீம் சாப்பிட கூடாது. அதையும் ஓரளவுக்கு சாப்பிடுவது தான் உடலுக்கு நல்லது. குழந்தை பெற திட்டமிடும் தம்பதிகள், தினசரி ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஃபெர்ட்டிலிட்டியை மேம்படுத்தும். ஆம், ஆய்வின் படி அதிக கொழுப்பு சத்து நிறைந்த பால் பொருட்களை சாப்பிடுவதால் ஃபெர்டிலிட்டி விகிதத்தை அதிகரிப்பது தெரியவந்துள்ளது.
பொதுவாக கால்சியம் சத்து குறைபாடு காரணமாக தான் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. அந்த வகையில், ஐஸ்க்ரீமில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. எனவே ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால், மார்பக புற்றுநோய் ஆபத்து வராமல் தடுக்க முடியும். பொதுவாக குளிர் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் உடலுக்கு இதமாக இருக்கும். ஐஸ்கிரீமின் இனிப்பு சுவை செரோடொனின் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களின் வெளியீட்டை அதிகரிக்கிறது. இதனால் நமது மனநிலை மேம்படுகிறது. ஐஸ்கிரீமில் வைட்டமின்கள் ஏ, டி மற்றும் பி12 உள்ளன. இதனால் குளிர்காலத்தில் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
Read more: இனி கண்ட மருந்துகள் வேண்டாம்.. இந்த ஒரு ரசம் போதும்.. உடலில் உள்ள பாதி பிரச்சனை முடிந்து விடும்..