ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளை தீர்க்கும் பூண்டு.! இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க.!?
பொதுவாக நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருட்களை வைத்தே பல மருத்துவங்களை நம் முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த வகையில் நாம் அடிக்கடி உணவுகளில் பயன்படுத்தி வரும் பூண்டு, பயன்படுத்தி பலவகையான நோய்களை தீர்க்கலாம் என்று கூறியுள்ளனர். பூண்டு என்னென்ன நோய்களை குணப்படுத்தும் என்பதையும், எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும், குறித்து இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்?
பூண்டில் ஆண்டி ஆக்சிடெண்ட், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், நார்ச்சத்து, சோடியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், செலினியம், கால்சியம், கந்தகம் போன்ற உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டசத்துக்களும் நிறைந்துள்ளன.
1. தினமும் ஒரு பூண்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறையும்.
2. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமடைந்து சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களை விரட்டும்.
3. குறிப்பாக ஆண்கள் பூண்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் பாலியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது.
4. பூண்டை பொடியாக செய்து நாம் சமைக்கும் பல உணவுகளிலும் பயன்படுத்தி பலன் பெறலாம்.
5. பூண்டை தேநீராக செய்து தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமடையும்.
(குறிப்பு : அல்சர், நெஞ்செரிச்சல், வாய்ப்புண் உள்ளவர்கள் பூண்டை பச்சையாக சாப்பிடக்கூடாது)