முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வெந்தயத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா.! மருத்துவர்களின் அறிவுரை என்ன.?

08:30 AM Jan 21, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக நாம் அன்றாடம் சமைக்கும் சமையலில் பயன்படுத்தும் பொருட்கள் பல மருத்துவ குணங்களையும் பெற்றுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டின் சமையல் முறையில் தவிர்க்க முடியாத பொருளாக இருந்து வருகிறது வெந்தயம். இது சிறியதாக இருந்தாலும் பல வகையான மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. வெந்தயம் ஆரோக்கியத்தின் சுரங்கம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

Advertisement

மேலும் வெந்தயத்தில் போலிக் ஆசிட் காப்பர், பொட்டாசியம், இரும்பு சத்து, ஜிங்க், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலில் சுரக்கும் அதிகப்படியான சர்க்கரையை  கட்டுப்படுத்துகிறது. தாய் பால் சுரப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு உடலில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களை தீர்த்தாலும் அளவுக்கு அதிகமாக வெந்தயம் சாப்பிடுவதனால் ஒரு சில நோய்களும் ஏற்படுகின்றது. அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?

இதன்படி இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக வெந்தயம் சாப்பிடும்போது சர்க்கரையின் அளவை முழுமையாக குறைத்து இன்சுலினை அளவுக்கு அதிகமாக சுரக்க வைக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் வெந்தயம் சாப்பிடுவதற்கு முன்பு தங்களின் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

மேலும் இதய நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், வயிற்றுப்போக்கு, செரிமான கோளாறு, தோல் நோய்கள், அரிப்பு, அலர்ஜி போன்றவர்கள் கண்டிப்பாக வெந்தயத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது உடலில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags :
BenefitsFenugreekhealthy
Advertisement
Next Article