தினமும் காலையில் பேரிச்சம்பழம் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா.?!
பல்வேறு சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழத்தை தினமும் காலையில் குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் தினமும் பேரிச்சம்பழம் உண்டு வருவது உடலில் சத்துக்களை அதிகரிக்கும்.
வெறும் வயிற்றில் ஒரு பேரிச்சம்பழம் தின்பதனால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை குறித்து பார்க்கலாம். பேரிச்சம் பழத்தில் சுக்ரோஸ், பிரக்டோஸ், குளுக்கோஸ் போன்ற இயற்கையான சர்க்கரைகள் இருக்கின்றன. இதனால் காலையில் பேரிச்சம்பழம் எடுத்துக் கொள்வதன் மூலம் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது.
மேலும் கர்ப்பிணி பெண்கள் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை இருப்பவர்கள் பேரிச்சம்பழம் உண்டு வரும்போது இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, உண்ணும் உணவை எளிதாக ஜீரணம் செய்து செரிமானத்தை சீர்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்சனையும் தீர்க்கிறது.
பேரிச்சம்பழத்தில் காணப்படும் அதிகப்படியான சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்துகிறது, மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது, ரத்த அழுத்தத்தை சரிப்படுத்துகிறது. இவ்வாறு தினமும் காலையில் ஒரு பேரிச்சம் பழம் தின்பதன் மூலம் பல்வேறு வகையான நோய்களை சரி படுத்தி நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாக வாழலாம்.