"90 வயது வரைக்கும் கண்ணாடி போடவே தேவையில்லை" இந்த ஒரு பழம் சாப்பிடுங்க போதும்.!?
பொதுவாக பழங்கள் என்றாலே பல ஆரோக்கிய ஊட்டச்சத்துக்களும், நன்மைகளும் கொண்டதாகவே இருக்கும். பழங்களை அடிக்கடி சாப்பிடுவது உடல் நலத்தில் எந்தவித நோயும் ஏற்படுத்தாமல் பாதுகாக்கும். அந்த வகையில் குறிப்பிட்ட சீசனில் மட்டும் கிடைக்கும் சீதாப்பழம் சாப்பிடுவதன் மூலம் உடலில் என்னென்ன நன்மைகள் நிகழும் என்பதை குறித்து பார்க்கலாம்.
1 வைட்டமின் சி சத்து சீத்தாப்பழத்தில் நிறைந்துள்ளதால் இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்க்கிருமிகள் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
2. நார்ச்சத்து நிறைந்துள்ள சீதாப்பழம் உண்பதன் மூலம் செரிமான மண்டலத்தை சரி செய்து வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
3. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் சீதாப்பழத்தில் நிறைந்துள்ளதால் இதை உண்பதன் மூலம் எலும்பு தேய்மானம், மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
4. ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் நிறைந்துள்ள சீதாப்பழத்தை உண்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடலை சுத்தப்படுத்துகிறது.
5. மனப்பதட்டம், மனக்குழப்பம், மன அழுத்தம் போன்ற மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் சீதாப்பழத்தை உண்பதன் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
6. குறிப்பாக சீதா பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது கண் பார்வைக்கு மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. இந்த பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் 90 வயது வரை கண்ணாடியே போட தேவையில்லை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.