நீண்ட ஆயுளை அள்ளி தரும் அற்புத கிழங்கு.! இதய நோய்க்கு மருந்து இது தான் தெரியுமா.!?
பொதுவாக மரவள்ளி கிழங்கு என்பது மாவுச்சத்து நிரம்பிய கிழங்காகும். இது உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு முக்கிய உணவாக இருந்து வருகிறது. அந்த அளவிற்கு ஊட்டச்சத்திற்கும், ஆரோக்கியமான வாழ்விற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. மரவள்ளி கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு என்னென்ன நன்மைகளை தரும் என்பதைக் குறித்து பார்க்கலாம்?
மரவள்ளி கிழங்கில் அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்து இருப்பதால் இது உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. கார்போஹைட்ரேட் அதிக அளவு சாப்பிடுவது உடலுக்கு நல்லதில்லை என்றாலும் மரவள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள கார்போஹைட்ரேட்டை எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மையை தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கோதுமையில் செய்த சப்பாத்தி, .ரொட்டி போன்றவைகளை சாப்பிடுவதற்கு பதில் மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் மாவின் மூலம் சப்பாத்தி ரொட்டி போன்றவைகளை செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை எளிதாக குறையும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் செரிமான மண்டலத்தை சீர்படுத்தி, குடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. இதனால் குடல் புண்கள், மலச்சிக்கல், குடலிறக்கம் போன்ற நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
மரவள்ளி கிழங்கில் பிளவனாயுடுகள், சப்போனின்கள், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளதால் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆக்சிஜனேற்றம் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் போன்றவற்றை கொண்டுள்ளதால் இதயத்தில் ஏற்படும் அடைப்பு மற்றும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றை குறைக்கிறது. மேலும் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் மரவள்ளிக்கிழங்கை அடிக்கடி உணவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய மரவள்ளிக்கிழங்கை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்.