முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆண்மை குறைபாட்டை சரி செய்யும் வாழைப்பூ.! வேறு என்னென்ன நோய்களை குணப்படுத்தும்.!?

09:34 PM Feb 13, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக வாழை மரத்தின் தண்டு, இலை, காய், பழம், பூ என அனைத்துமே ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருளாகவே இருந்து வருகிறது. குறிப்பாக வாழைப்பூ பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ பண்பு நிறைந்ததாக உள்ளது. வாழைப்பூவில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஜிங்க், காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் சி போன்ற பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இவ்வாறு பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்த வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை குறித்து பார்க்கலாம்.

Advertisement

1. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலி, அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல், கர்ப்பப்பையில் புண், நீர்கட்டி போன்ற பிரச்சனைகiளுக்கு தீர்வாக வாழைப்பூ இருந்து வருகிறது.
2. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து இரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது. இதன் மூலம் இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
3. உடல் வெப்பத்தை குறைத்து சூட்டினால் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்கிறது.
4. கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் வாழைப்பூவை உணவாக கொடுத்தால் ஹீமோகுளோபின் அதிகரித்து ரத்தசோகை நோய் வராமல் காக்கலாம்.
5. உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
6. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு பிரச்சினை இருப்பவர்களுக்கு பெரிதும் உதவி புரிகிறது.
7. குறிப்பாக ஆண்களுக்கு மலட்டு தன்மையை சரி செய்து உயிரணுவை அதிகரிக்க செய்கிறது.  வாரத்திற்கு இரண்டு முறை வாழைப்பூவை சாறாகவோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிட்டு வந்தால் ஊட்டச்சத்து அதிகரித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.    

Tags :
Banana flowerBenefitshealthy
Advertisement
Next Article