சர்க்கரை நோய் முதல் புற்று நோய் வரை குணப்படுத்தும் அதலைக்காய்.!? இவ்வளவு நன்மைகளா.?
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரும் துரித உணவுகளுக்கு அடிமையாகி விட்டனர். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல வகையான நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். வீட்டில் சமைத்த ஊட்டச்சத்தான உணவுகளை உண்பதே உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும்.
அந்த வகையில் அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்த அதலைக்காய் தற்போது பலரும் சாப்பிட விரும்புவதில்லை. ஆனால் இதில் உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்தும் நிறைந்துள்ளது. அதலைக்காய் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன நோய்கள் குணமாகும் என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்?
1. அதலைலக்காயில் உள்ள பைடோநியுடிரின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
2. இந்த பைடோநீயூட்ரின் வேதிப்பொருள் சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்கும் மருத்துவ குணம் கொண்டது என்பதால் சிறுநீரககல் பிரச்சினை உள்ளவர்கள் அதலைக்காய் அடிக்கடி சாப்பிட வேண்டும்.
3. இதில் உள்ள லெய்ச்சின் என்ற வேதிப்பொருள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
4. புற்று நோய்களை உருவாக்கும் செல்கள் உடலில் வராமல் தடுப்பதில் அதலைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
5. கணையம் மற்றும் இரைப்பை போன்ற உறுப்புகளின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.
6. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து இதயத்திற்கு செல்லும் ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்கிறது. இவ்வாறு பல நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் அதலைக்காயில் இருப்பதால் இதை அடிக்கடி வீட்டில் உணவாக சமைத்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது.