For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குழந்தைகள் அதிபுத்திசாலியாக வளர, இந்த ஒரு பொருளை மட்டும் உணவில் சேர்த்துக்கோங்க.!

05:35 AM Feb 01, 2024 IST | 1newsnationuser5
குழந்தைகள் அதிபுத்திசாலியாக வளர   இந்த ஒரு பொருளை மட்டும் உணவில் சேர்த்துக்கோங்க
Advertisement

பொதுவாக குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தானதாகவும், சுவையானதாகவும் உணவுகளை கொடுப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும். ஊட்டச்சத்தானதாக குழந்தைகளுக்கு கொடுத்தால் சுவையில்லாமல் இருப்பதால் அத்தகைய உணவுகளை உண்பதற்கு மறுக்கின்றனர். ஊட்டச்சத்தானதாகவும், சுவையானதாகவும் நிறைந்த இந்த ஒரு உணவு பொருளை தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.

Advertisement

அதாவது ஊட்டச்சத்து நிறைந்த சுவையான அக்ரூட் பருப்புகள் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருந்து வருகிறது. இந்த அக்ரூட் பருப்பு சிறியதாகவும், முறுமுறுப்பாகவும் இருப்பதால் குழந்தைகளும் இதை விரும்பி உண்னு வருகின்றனர்.

குறிப்பாக தேர்வு நேரங்களில் இந்த அக்ரூட் பருப்பை குழந்தைகளுக்கு தினமும் காலையில் சாப்பிட கொடுத்து வந்தால் நியாபக சக்தி அதிகரிக்கும். மேலும் குழந்தைகள் மகிழ்ச்சியானவர்களாகவும், புத்திசாலியானவர்களாகவும் வளர இந்த அக்ரூட் பருப்பு சிறந்த ஒரு உணவு பொருளாக இருந்து வருகிறது.

இந்த அக்ரூட் பருப்பில் ஒமேகா-3, நார்ச்சத்து, புரதச்சத்து போன்றவை அதிகமாக இருப்பதால் மூளைகளுக்கு செல்லும் நரம்புகளில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து குழந்தைகளை வலிமை மிக்கவர்களாகவும், சுறுசுறுப்பானவர்களாகவும் மாற்றுகிறது. மேலும் இதயம் மற்றும் எலும்புகளையும் வலுப்படுத்துகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய இந்த அக்ரூட் பருப்பை தினமும் குழந்தைகளுக்கு அளித்து வருவது பல்வேறு நன்மையை ஏற்படுத்தும் என்று மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

Tags :
Advertisement