அதிகாலையில் எழுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் ஏற்படுமா.!?
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரும் இரவு நேரங்களில் தாமதமாக தூங்கி, பகலில் தாமதமாக எழுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இது மிகவும் தவறான பழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இது உடல் நலத்தையும், மனநலத்தையும் மிகவும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் இரவில் சீக்கிரமாக தூங்கி அதிகாலையில் எழுபவருக்கு உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றன என்று ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமான 3 முதல் 5 மணிக்குள் எழுநதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை குறித்து பார்க்கலாம்?
1. அதிகாலையில் சூரிய ஒளி நம் உடலில் படும்போது வைட்டமின் டி சத்து நம் உடலுக்கு கிடைப்பதோடு, உடல் சுறுசுறுப்பாகவும் இருக்க வைக்கிறது.
2. அதிகாலை நேரத்தில் எழுபவருக்கு மன அழுத்தம் ஏற்படுவது மிகவும் குறைவு.
3. அதிகாலையில் எழும்போது மூளை, இதயம் என அனைத்து உறுப்புகளும் சீராக செயல்பட்டு மன அமைதியை தரும்.
4. மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிக்கும்போது மூளை சுறுசுறுப்பாக இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
5. குறிப்பாக மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் நம் உடலில் அதிகாலை நேரத்தில் அதிகமாக உருவாகுவதால் அன்றைய நாள் முழுவதும் நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். இவ்வாறு பல்வேறு மாற்றங்கள் அதிகாலை நேரத்தில் எழுவதால் நம் உடலில் ஏற்படும்.