வெறும் வயிற்றில் தக்காளி ஜுஸ் குடிப்பதனால் இவ்வளவு நன்மைகளா.?
நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவை ஆரோக்கியமானதாகவும், சத்தானதாகவும் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலில் நோய் தாக்கங்கள் ஏற்படுவதை தடுக்கலாம். அந்த வகையில் உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்த தக்காளியை ஜூஸாக செய்து குடித்து வரலாம்.
தக்காளி ஜூஸ் குடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள்
1. காலையில் எழுந்து வெறும் வயிற்றில் காபி, டீ போன்ற பானங்களை குடிப்பதற்கு பதில் தக்காளி ஜூஸ் குடித்து வந்தால் சருமத்திற்கு மிகவும் நல்லது
2. தக்காளியில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவை வயிற்றில் உருவாகும் அமிலத்தை சீர்படுத்துகிறது.
3. மேலும் தக்காளி சாறு உடலின் வளர்ச்சியை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
4. நார் சத்து நிறைந்த தக்காளியை சாறாக எடுத்துக் கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனையை சரிப்படுத்தி மலச்சிக்கலை குணமாக்கிறது.
இது போன்ற சத்து நிறைந்த தக்காளியை வெறும் வயிற்றில் ஜூஸாக குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறலாம் என்று வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.