காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா.? மருத்துவர்களின் அறிவுரை என்ன.!?
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. பலரும் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டால் அவதியுறுகின்றனர். இதற்கு சிறந்த தீர்வாக இளநீர் இருக்கும். ஆனால் இளநீர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி என்பதால் இது தினமும் குடிக்கலாமா? யார் யார் குடிக்க கூடாது? என்பது குறித்து பலருக்கும் கேள்வி இருந்து வருகிறது. இதற்கு மருத்துவரின் அறிவுரை என்ன என்பதை குறித்து பார்க்கலாம்?
உடலில் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள் இளநீர் தினமும் தாராளமாக குடிக்கலாம். ஆனால் இளநீர் மிகவும் குளிர்ச்சியான பானம் என்பதால் சளி தொல்லை இருப்பவர்கள் வெயில் நேரங்களில் மட்டுமே குடித்து வரலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் ஒரு இளநீரை குடிப்பதால் பசி உணர்வு கட்டுப்படுத்தும்.
மேலும் உடற்பயிற்சி செய்பவர்கள் இளநீரை தண்ணீருக்கு பதிலாக தினமும் குடித்து வருவது நல்லது. நீரிழிவு பிரச்சினை, சிறுநீரக பாதிப்பு, ஆஸ்துமா போன்ற பிரச்சனை இருப்பவர்கள் இளநீரை குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இளநீரை வைத்து ஒரு சில உணவுப் பொருட்களை செய்தும் சாப்பிடலாம். இது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
இளநீர் குடிப்பது உடலில் பொட்டாசியம் சத்தை அதிகப்படுத்தும் என்பதால் சிறுநீரக கல், சிறுநீரக செயல் இழப்பு போன்ற பிரச்சினை இருப்பவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் நெஞ்செரிச்சல், வயிற்று புண்ணிற்கு இளநீர் சிறந்த தீர்வாக இருந்து வந்தாலும், இப்பிரச்சினை இருப்பவர்கள் காலை நேரத்தில் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.