Salt tea : தினமும் காலையில் குடிக்கும் டீயில் உப்பு சேர்த்து குடித்து பாருங்கள்.!?
பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரும் காலையில் எழுந்ததும் டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். காபியை விட பலருக்கும் டீ பிடித்தமானதாக இருந்து வருகிறது. காலையில் ஒரு கப் டீ குடிப்பதன் மூலம் அன்றைய நாளை சுறுசுறுப்பாகவும், ஆற்றலுடனும் எடுத்துச் செல்ல முடிகிறது.
அந்த அளவிற்கு டீ பலருக்கும் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. டீ குடிப்பதால் உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும் என்றாலும், அதிகப்படியாக டீ குடிப்பது உடலுக்கு நல்லது இல்லை. மேலும் காலையில் எழுந்து குடிக்கும் டீயில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடலில் பல நன்மைகள் ஏற்படும் என்று ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதைப் பற்றி விளக்கமாக பார்க்கலாம்?
பொதுவாக சோடியம் உடலில் பல நோய்களை ஏற்படுத்தினாலும் இதனை டீயில் சிறிதளவு சேர்த்து குடிக்கும்போது உடலுக்கு நன்மையை தருகிறது. இந்த உப்பு உடலில் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் திரவங்களை சமநிலையில் பேணுகிறது. உடலில் உள்ள செல்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது. குறிப்பாக வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சீராக இருக்கச் செய்கிறது.
மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, நரம்பில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளை சீராக்கி குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், செரிமான பிரச்சனை இருப்பவர்கள், ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் பிளாக் டீயில் உப்பு கலந்து குடிக்கும் போது இப்பிரச்சனை குணமாகும்.