Clay Pot: வெயில்காலம் வந்துவிட்டது.! மண்பானையில் தண்ணீர் ஊற்றி இப்படி குடித்து பாருங்க.!?
Clay Pot: வெயில் காலத்தில் பலரும் குளிர்ந்த நீரை குடிக்க வேண்டும் என்று ஆசைபடுகின்றனர். ஆனால் குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ள நீரை குடிக்கும் போது உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக மண் பானையில் தண்ணீர் வைத்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சியையும் தரும், நோய்களையும் தீர்க்கும் என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அப்படியிருக்க இந்த மண்பானையை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
மண்பானையில் குடிநீர் ஊற்றி 5 முதல் 7 மணி நேரங்கள் தனியாக வைத்து விட வேண்டும். இவ்வாறு வைக்கும் போது தண்ணீரில் உள்ள நச்சுகள் பானையின் அடியில் தேங்கி மண்பானையில் உள்ள சத்துகள் தண்ணீரில் கலந்துவிடும். இதனாலேயே இயற்கையின் மிகசிறந்த வாட்டர்பில்டர் என்று மண்பானையை அழைத்து வருகிறோம்.
மண்பானையில் தாதுக்கள், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் உடலுக்கு பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. உடலில் வளர்ச்சிதை மாற்றம் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் புதிதாக மண்பானை வாங்கும் போது முதன் முதலில் ஊற்றும் தண்ணீரை குடிக்கக்கூடாது. ஒரு வாரத்திற்கு தண்ணீர் மாற்றி மாற்றி வைத்துவிட்டு ஒரு வாரம் கழித்து ஊற்றும் தண்ணீரை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் வீட்டில் தரையில் மணல் நிரப்பி மனலில் சிறிது தண்ணீர் தெளித்து அதன் மீது மண்பானையை வைத்து விட வேண்டும். மணல் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்யும் போது மண்பானையில் வைக்கும் நீர் எப்போதும் குளுமையாக இருக்கும். வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் சூடு பிரச்சனைகளையும் இந்த மண்பானை தண்ணீர் சரி செய்யும்.