சைவ உணவு பிரியர்களுக்கான தாவர பால்.? இதில் உள்ள நன்மைகள் என்ன.!?
பொதுவாக நம்மில் பலரும் அசைவ உணவு மற்றும் சைவ உணவு என பிடித்தமான உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். ஒரு சிலருக்கு அசைவம் பிடிக்காது. ஒரு சிலருக்கு சைவம் பிடிக்காது. அந்த வகையில் அசைவம் சாப்பிட விரும்பாமல் சைவ உணவை மட்டும் சாப்பிடும் சைவ பிரியர்களுக்கான பால் தான் இந்த தாவர பால். இந்த பால் சோயா, பாதாம், தேங்காய், ஓட்ஸ், முந்திரி போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் இந்த உணவு பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் தாவர பாலில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்று பார்க்கலாம்?
பாதாம் பால் - பசும்பாலுடன் ஒப்பிடும்போது பாதாம் பாலில் அதிகப்படியான கொழுப்புகள் உள்ளது. பாதாம் பாலில் நிறைந்துள்ள லிப்பிடுகள் என்ற ஊட்டசத்து எடை குறைக்க உதவும். மேலும் இதில் குறைவான கலோரிகளும், அதிகப்படியான புரதமும் இருப்பதால் இது குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்றதல்ல.
சோயா பால் - பசும்பாலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், கலோரிகள் புரதங்கள், லிப்பிடுகள் என அனைத்துமே சோயா பாலில் இருப்பதால் இது பசும்பாலுக்கு நிகராக கருதப்பட்டு வருகிறது.
தேங்காய் பால் - தேங்காய் பாலில் குறைவான புரதமும், அதிகளவு கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளது. அதிக புரதம் தேவைப்படும் நபர்களுக்கும், உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கும் தேங்காய் பால் ஏற்றதல்ல.
ஓட்ஸ் பால் - ஓட்ஸ் பாலில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் இது உடலில் பல நன்மைகளை ஏற்படுகிறது. மேலும் அதிக அளவு புரதச்சத்து தேவைப்படுபவர்கள் அருந்தலாம்.
முந்திரி - இந்த பாலில் வெண்ணெய் சேர்க்கபடுவதால் அதிக கொழுப்பு சத்தும், நார்ச்சத்தும் அடங்கியுள்ளது. மேலும் இதில் அதிக அளவு கொழுப்பு உள்ளதால் உடல் எடையை அதிகரிக்கும். புரதம் மிகக்குறைவாகவே இருக்கும்.
பசும்பால் குடிப்பதால் அலர்ஜி உள்ளவர்கள், பசும்பாலில் உள்ள லாக்டோஸ் பிடிக்காதவர்கள், சைவ உணவு பிரியர்கள் மேலே குறிப்பிட்ட தாவர பாலை அருந்தி வரலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.