For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தினமும் காலையில் ஒரு கிளாஸ் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால் என்ன நடக்கும் தெரியுமா.!?

05:30 AM Feb 28, 2024 IST | 1newsnationuser5
தினமும் காலையில் ஒரு கிளாஸ் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால் என்ன நடக்கும் தெரியுமா
Advertisement

பொதுவாக காலையில் பலருக்கும் டீ, காபி போன்றவற்றை குடிப்பது பழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இது உடல் நலத்திற்கு ஏற்றதல்ல. பல நோய்களை ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இதற்கு பதிலாக சுடுதண்ணீரில் சீரகத்தை கொதிக்க வைத்து  சீரக தண்ணீராக குடித்து வந்தால் உடலில் பல நோய்களை தீர்க்கும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். சீரக தண்ணீர் என்னென்ன நோய்களுக்கு மருந்தாகும் என்பதை குறித்து பார்க்கலாம்?

Advertisement

1. சீரகத்தில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், வைட்டமின் பி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் உடல் சீராக செயல்பட உதவுகிறது.
2. தினம் தோறும் சீரகத்தை உணவில் பயன்படுத்துவதன் மூலம் உடல் வலுப்பெறும்.
3. எண்ணற்ற மருத்துவ பண்புகளை கொண்ட சீரகத்தை நன்றாக பொடியாக்கி துணியில் கட்டி தூங்கும் போது, தலையணையின் அடியில் வைத்து படுத்தால் அதன் வாசம் நமக்கு தூக்கத்தை ஏற்படுத்தும்.
4. குறிப்பாக சீரகப் பொடியின் வாசனை நம் உடலில் ஒரு வித ஹார்மோனை சுரக்க வைத்து மனப்பதட்டம், கோவம், அழுகை போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
5. சீரகத்தை நன்றாக வறுத்து பொடி செய்து பாலில் கலந்து தலையில் தேய்த்தால் முடி கருகருவென நீளமாக வளரும்.
6. முடி உதிர்தல், பொடுகு, பேன் தொல்லை இருப்பவர்கள் சீரகத்தை தலையில் தேய்த்து 30 நிமிடம் ஊற வைத்து குளித்து வரலாம்.
7. சீரகப்பொடி, எலுமிச்சை சாறு, புதினா சாறு, சிறிதளவு உப்பு அனைத்தும் சேர்த்து சுடுதண்ணீர் கலந்து குடித்து வந்தால் கல்லீரலில் உள்ள நச்சுக்கள் வெளியாகி சீராக செயல்பட உதவும்.
8. இரவு முழுவதும் சீரகத்தை தண்ணீரில் ஊற வைத்து பின்பு காலையில் கொதிக்க வைத்து எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.
9. சீரக தண்ணீர் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, உயர் ரத்த அழுத்த பிரச்சனையையும் தீர்க்கும்.
10. சீரகத் தண்ணீர் குடிப்பதன் மூலம் மூளை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும், உடல் அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றலுடனும் இருக்கும்.

English summary : many disease cured by drinking cumin water

Read more : உடலில் வியர்வை நாற்றம் நீங்க குளிக்கும் போது இந்த மூலிகையை பயன்படுத்தி பாருங்க.!?

Advertisement