முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்களுக்கு மன அழுத்தம் அதிகமா இருக்கா?? அப்போ இந்த தேநீரை குடித்து பாருங்கள்.. உங்களுக்கே வித்தியாசம் தெரியும்..

benefits-of-drinking-butterflypea-tea
04:31 AM Nov 24, 2024 IST | Saranya
Advertisement

வேலி ஓரங்களில் வளர்ந்து கிடக்கும் ஒரு வகை தாவரம் தான் சங்குப்பூ. இதை பலர் வெறும் அழகிற்காக வளர்த்து வருகின்றனர். ஆனால் இந்த பூவால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். குப்பையில் இருக்கும் இந்த பூவில் என்ன நன்மை கிடைக்க போகிறது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். சங்குப்பூவில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடெண்ட்டுக்கள் உள்ளது. இதனால், நமது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து, இளமையான தோற்றத்தை பெற முடியும். மேலும், சங்குப்பூவில் உள்ள பிளவனாய்டுகள் சருமத்திற்கு தேவையான கொலாஜெனை உற்பத்தி செய்கிறது. இத்தனை நன்மைகளை கொண்ட சங்குப்பூவில் தேநீர் தயாரித்து குடிக்கலாம்.

Advertisement

இப்படி சங்குப்பூவில் தேநீர் தயாரித்து குடிப்பதால், அதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்சிடெண்ட்டுகள் நமது மன அழுத்தத்தை குறைத்து விடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மனித உடலுக்கு புத்துணர்ச்சியை தருவது மட்டும் இல்லாமல், சங்குப்பூவில் உள்ள அந்தோசயன், நமது உச்சந்தலையில் உள்ள ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் நமது தலையில் முடிகள் நன்கு வளரும். மேலும், இந்த பூ கொண்டு செய்யப்படும் இந்த தேநீரை குடிப்பதால் வயிற்றில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி, செரிமானம் சீராகும்.

இது மட்டும் இல்லாமல், உடலில் ஏற்படும் வலி, காய்ச்சல், ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற எண்ணற்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு நல்ல தீர்வு.. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சங்குப்பூ தேநீர் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆம், இந்த தேநீரை தினமும் குடித்து வந்தால் ஒரு மாதத்திற்கு 2 கிலோ வரை எடை குறையும். மேலும், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும். இவ்வளவு ஏன், சங்குப்பூ புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை கூட அழித்து போராடும்.

Read more: “லிப் லாக் காட்சி இருந்தால், படத்தில் நடிக்க மாட்டேன்”; பிரபல நடிகையின் கொள்கையை புகழும் ரசிகர்கள்..

Tags :
butterflypeadepressionFlowertea
Advertisement
Next Article