For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குளிர்காலத்தில் மோர் குடிக்கலாமா.? இதைப் பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்.?!

06:07 AM Jan 08, 2024 IST | 1newsnationuser5
குளிர்காலத்தில் மோர் குடிக்கலாமா   இதைப் பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்
Advertisement

மோர் என்பது நமது உணவு வகைகளில் முக்கியமானதாக இருக்கிறது. இது உடலைக் குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. காரமான உணவுகளை உண்டபிறகு, சிறிது மோர் குடித்தால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் அடங்கும். மேலும் நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு மோர் ஒரு சிறந்த தீர்வாகும்.

Advertisement

தினமும் நாம் உண்ணும் உணவில் மோர் சேர்த்துக்கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, செரிமானமும் எளிதில் நடக்க உதவுகிறது. மோர் ஜீரணத்தை எளிதாக்கும் ஒரு உணவுப்பொருளாகும். சாப்பிட்டவுடன் இறுதியாக மோர் குடிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

மோரில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே தினமும் மோர் சாப்பிடுவதால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் மோர் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க மோர் உதவுகிறது.

குளிர்காலத்திலும் மோர் குடிக்கலாமா என்பது பலர் கேள்வியாக இருந்து வருகிறது. குளிர் காலத்தில் நம் உடல் அடிக்கடி நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கும். இதனால் உடலுக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டு சரும வறட்சி, தோல் அரிப்பு, சிறுநீரக பிரச்சனை போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதற்கு முக்கிய தீர்வாக மோர் குடிப்பது மிகவும் நல்லது. மேலும் குளிர்காலத்திலும் மோர் குடிக்கலாம் என்று மருத்துவர்களும் கூறி வருகின்றனர்.

Tags :
Advertisement